“என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்” (தானியேல் 9:18).

இந்த இடத்தில் தானியேல் தன்னைத் தாழ்மைப்படுத்தி ஜெபிக்கிற அருமையான ஜெபமாய் இருக்கிறது. தாழ்மையான ஜெபம் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமானது. ஆயக்காரன் தூரத்திலே நின்று தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தானே. அந்த ஜெபம் மிக சிறியதுதான் ஆனால் மிக வல்லமையுள்ளது. நம்முடைய வாழ்க்கையிலும் தாழ்மையுள்ளவர்களாய் ஜெபிப்பது மிக அவசியம். ஆண்டவரே பாழிடங்களையும் கனிகொடாத தன்மையும் என்னிலிருந்து எடுத்துப்போடும் என்று தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம். தேவன் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்று வேதம் சொல்லுகிறது. மேலும் நம்மில் வேதனை உண்டாக்குகிற காரியங்களை தேவன் நீக்கிப்போடத்தக்கதாக  அவருடைய கிருபைக்காக நாம் கெஞ்சி வருவோம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் மேலான காரியங்களைச் செய்கிறவராய் இருக்கிறார்.