“நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” (பிரசங்கி 6:12).

இது மெய்யாலுமே ஒரு மிகப் பெரியக் கேள்வி என்றே சொல்ல வேண்டும். இந்தக் குறுகியக்கால வாழ்க்கையில் நாம் செய்யும்படியான மிகச் சிறந்தக் காரியம் நன்மையைத் தெரிந்து கொள்வது. இந்த நன்மை என்பது ஆண்டவரைத் தெரிந்து கொள்ளுவது. அவரை அறிந்திருப்பது. அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது. அவருக்காக வாழுவது. நாம் வாழும் வாழ்க்கை நிழலைப் போன்றது. மனிதனுடைய வாழ்க்கை என்பது எவ்வளவு சீக்கிரம் நிழலைப் போல் மறைந்துவிடுகிறது! மேலும் இது மாயையாக இருக்கிறது. ஒரு அழிந்து போகிற காரியத்தை நிலைத்திருப்பதைப் போல பின்பற்றி அதற்காக தன்னுடைய எல்லாக் காலத்தையும் செலவிடுகிற மாயையான வாழ்க்கை இது. இதன் முடிவு நித்தியமான நரக ஆக்கினை. அவனுடைய வாழ்க்கையில் என்றென்றைக்கும் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வில்லை என்றால் அவன் பிறவாதிருப்பதே நலம். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தன்மைக் கொண்டவன். இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாயையை நம்பி கிருபையைப் போக்கடித்து எல்லாச் சிலாக்கியங்களையும் இழந்து நன்மையைக் காணாதிருக்கிறார்கள். இதைக் குறித்து நாம் சிந்திப்பது நல்லது.