“இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்” (யோவான் 12:15).

 தேவ குமாரனின் தாழ்மையை இங்கு பார்க்கிறோம். அவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ ஏகாதிபத்தியதின் தேவன். ஆனால் அவர் ஒரு கழுதைக்குட்டியைத் தெரிந்து கொள்ளுகிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தாழ்மை இருக்கும்பொழுது மாத்திரமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் பிரயாணம் செய்ய முடியும். நான் ஒரு கழுதை ஆண்டவரே, உம்மை சுமக்குகிறவனாய் என்னை மாற்றும். இந்த உலகத்தில் நீர் எனக்குச் செய்த நன்மைகளை எல்லாம் எண்ணிப்பார்க்கும்பொழுது என்னுடைய உள்ளம் உடைபடுகிறது. எனக்காக நீர் உம்முடைய சொந்த ஜீவனையும் ஒப்புக்கொடுத்த இந்த அன்பை எண்ணிப்பார்க்கும்பொழுது பாவியாகிய எனக்கு இவ்வளவு அன்பா? என்னில் எந்தவிதமான நன்மையும் இருப்பதை நான் பார்க்க முடிவதில்லை. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஆவியில் எளிமை, தாழ்மையின் சிந்தை, ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிற இருதயம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்பொழுது மாத்திரமே நாம் ஆண்டவருக்குப் பிரியமானவர்களாய்க் காணப்படுவோம். ஆண்டவரே என்னை ஒரு கழுதையாக மாற்றும் என்று சொல்லுவது நம்முடைய ஜெபமாக இருக்கட்டும். அப்பொழுது ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் நம்மை தாழ்மை சிந்தையுள்ள கழுதையைப் போல மாற்றுவார். அதில் அவர் பிரயாணம் செய்வதில் மிகுந்த சந்தோஷமுள்ளவராய்க் காணப்படுவார்.