தேவன் என்பவர் இருக்கிறாரா, அவர் உண்மையாக இருக்கிறார் என்பதை எப்படி நாம் அறிய முடியும்?
பதில்:
தேவன் தாம் இருக்கிறார் என்பதை மூன்று விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒன்று தாம் சிருஷ்டித்தவைகளின் மூலமாக, இரண்டு, தன் வார்த்தையின் மூலமாக, மூன்றாவதாக தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவன் சிருஷ்டிப்பின் மூலமாக தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆதியாகமம் 1: 1ல் ’ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்’. இவ்விதமாக தேவன் தாமே உண்டாக்கினவைகளைக் குறித்து ரோமர் 1 : 20ல் ‘ எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்’. சங்கீதம் 19 :1லும் கூட ‘வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு கை கடிகாரம் கீழே கிடக்குமானால், அந்த கைகடிகாரம் தானாகவே அங்கு வந்தது என்றும் அல்லது அது செயல்படுவது தானாகவே ஏற்பட்டது என்றும் சொன்னால் அது நிச்சயமாக நம்பமுடியாது. அதை உருவாக்கினவர் ஒருவர் உண்டு என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவ்விதமாகவே இந்த அகில லோகமும் தானாகவே உண்டானது என்றால் அதை நாம் நம்பமுடியாது. அதுமாத்திரமல்ல தேவன் மனிதனுக்குள்ளாக தான் இருப்பதை குறித்த ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். சரித்திரத்தின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பலவிதமான மக்கள், பல விதமான கலாச்சாரத்தின் மத்தியிலும் வாழ்ந்தவர்கள் தங்களுக்கு மேலாக ஒரு சக்தி உண்டு என்பதை நம்பி வருகிற உணர்வை கொண்டிருந்தவர்களாக தொன்றுதொட்டு வாழ்ந்து வந்ததைப் பார்த்திருக்கிறோம். இன்னுமாக மனிதனை தேவன் தம்முடைய சாயலில் உருவாக்கினார் ஆகவே தேவனுடைய பல பண்புகள் பல சன்மார்க்கத்துக்குரிய காரியங்களை மனிதனில் பார்க்கிறோம்.
அடுத்ததாக தன்னுடைய வார்த்தையின்மூலமாக தேவன் தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வேதாகமம் மனிதர்களை மாற்றுகிறது. அதனுடைய மாறாத நித்திய தன்மையை இன்றும் உணரமுடிகிறது. தேவனுடைய வார்த்தை மனிதனுடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதை மனிதனால் உணரமுடிகிறது. தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளதும், ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாயிருக்கிறது. வல்லம யுள்ளதுமாயிருக்கிறது(எபி 4:12 ) என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிற சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம். வேதத்தில் தேவன் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். யாத்திராகமம் 3 : 14ல் தேவன் தான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று மோசேயுடனே வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம்.
மூன்றாவதாக இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்து தேவன் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றும்படியாக இயேசுகிறிஸ்து இவ்விதமாக வந்து மரித்து உயிர்தெழுந்தததின் மூலமாக வெளிப்படுத்தாமல் தவறவில்லை.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் 3 இடங்களில் சொல்லப்படிருகிறது.சரித்திரபூர்வமான இயேசுகிறிஸ்துவின் வருகையை நாம் அறிந்திருக்கிறோம் தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான காரியங்களை செய்துவருகிறார்கள் என்று சங்கீதம் 14 :1ல் பார்க்கிறோம். எபிரேயர் 11 : 6ல் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.