“தேசத்தின் ஜனங்கள் இடுக்கண் செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசேக்கியேல் 22:29-30).
கர்த்தருடைய வார்த்தையை தியானித்து அதின் அடிப்படையில் ஜெபிக்கும்பொழுது அநேக ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்றுக்கொள்ள ஆண்டவர் உதவி செய்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகமெங்கும் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று சொன்னார். தேவன் எல்லா நாடுகளைக் குறித்தும், ஆத்துமாக்களைக் குறித்தும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் கடமைப்பட்டவனாய் இருக்கிறான். ஆகவே தேசங்களுக்காக நாம் ஜெபிப்பதும் தேவன் நமக்குக் கொடுக்கிற கடமையாக இருக்கிறது. தேசத்தை அழிக்காதபடிக்கு அதற்காக ஜெபிக்கிற மக்களை தேவன் தேடுகிறதைக் குறித்து நாம் பார்க்கிறோம். இப்பொழுதும் அழிந்துபோய்க் கொண்டிருக்கின்ற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிறவர்களை தேவன் எதிர்பார்க்கிறார், தேடிக்கொண்டே தான் இருக்கிறார். தேவன் நமக்கு எவ்வளவு காலங்களையும் நேரங்களையும் கொடுத்திருக்கின்றார். ஆபிரகாம் தனி மனிதனாக லோத்தின் நிமித்தமாக சோதோம் கொமோராப் பட்டனத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபித்தான். அப்பொழுது லோத்து காப்பாற்றப்பட்டான். இன்றைக்கு நாம் உலகத்திற்காக ஜெபிப்பது எவ்வளவு மிக அவசியம்! எத்தனையோ தேசங்களில் சுவிசேஷம் பிரசங்கிக்க ஆட்கள் இல்லை. அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காக ஜெபிக்கிற மக்களை தேவன் தேடுகிறார். நம்முடைய இருதயத்தில் ஆத்தும பாரம் தேவை. உலகத்திற்காக நாம் பாரப்படுவோம் ஜெபிப்போம். தேவன் நிச்சயமாக நம்முடைய ஜெபம் வீணாய்ப் போக விடமாட்டார். அதை நாம் ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் அநேக மக்களுக்காகவும் தேசங்களுக்காகவும் ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம்.