இரட்சிக்கப்படுவது எப்படி?

How to be Saved?

by Dr. David Elangovan

 

          பொதுவாக இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும், தன்  வாழ்க்கையில், பல கேள்விகள் கொண்டவனாகத்தான் வாழுகிறான். ஆனால் அதிமுக்கியமான ஒரு கேள்வியைக் கேட்ட ஒரு மனிதனையும், அதற்குரிய பதிலையும் நாம் இந்த சிற்றேட்டில் பார்க்க இருக்கிறோம்.  பொதுவாக இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும், தன்  வாழ்க்கையில், பல கேள்விகள் கொண்டவனாகத்தான் வாழுகிறான். ஆனால் அதிமுக்கியமான ஒரு கேள்வியைக் கேட்ட ஒரு மனிதனையும், அதற்குரிய பதிலையும் நாம் இந்த சிற்றேட்டில் பார்க்க இருக்கிறோம்.  அப்போஸ்தல நடபடிகள் 16 ஆம் அதிகாரத்தில் இந்த மனிதனை நாம் பார்க்கிறோம். இந்த மனிதன் ஒரு சிறைச் சாலை அதிகாரி. பவுல் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டிருந்தார். அவருடனே கூட சீலாவும் இருந்தார். பவுலும், சீலாவும் சேர்ந்து தேவனைத் துதித்துப் பாடுகிறார்கள். இதனைப் பார்த்த அந்த சிறைச்சாலை அதிகாரி ஒரு கேள்வியை எழுப்புகிறார். அது: “அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்” (அப் 16:29,30).  நம்முடைய வாழ்க்கையிலும் நாம் கேட்கவேண்டிய ஒரு கேள்வி இதுதான். இதை வாசிக்கிற உங்களுக்கும் கூட இந்தக் கேள்வி அநேகமுறை எழும்பியிருக்கலாம். வாழ்க்கையினுடைய பலவிதமான போராட்டங்கள், நெருக்கங்கள், பாடுகளின் ஊடாக கடந்து செல்லும்பொழுதும் மற்றும் ஆவியானவர் உங்களுடைய மனதில் பேசுகிற வேளையிலே இந்த கேள்வியை நீங்கள் கேட்டிருக்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது மிகநன்று.  நான்கு காரியங்களை முக்கியமாக உங்கள் முன் வைக்கிறேன். இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இந்த நான்கு காரியங்களை நீங்கள்  செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. மாறாக இந்த நான்கு காரியங்கள் மூலமாக தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை நீங்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்களானால் உங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் இரட்சிக்கப்படாமல் இருந்தால்  இரட்சிப்பின் வழியை அறிந்துகொண்டு, தேவனிடத்தில் இரட்சிப்பிற்காக மன்றாட உதவியாக இருக்கும். 

 

 

இரட்சிக்கப்படுவது எப்படி? (PDF) – Click to Download