“நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” (லூக்கா 15:18).

நம்முடைய வாழ்க்கையில் நாம் தீர்மானங்களை எடுப்பது அவசியம். அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியான தீர்மானங்கள் இல்லை. நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய விளங்குதலை நாம் சரியாய்ப் பெற்றுக்கொள்ளும்போது மாத்திரமே மாத்திரமே, நம் ஆவிக்குரிய தரித்திரத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும். நாம் இந்த உலகப்பிரகாரமான பல நன்மைகளைப் பெற்றிருந்தாலும், ஆவிக்குரிய அளவில் நாம் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் சோதனைகளில் நாம் விழுந்துவிடுகிறோம். ஆனால் நான் ஆண்டவரிடத்தில் என்னை ஒப்புக்கொடுப்பேன் என்று தீர்மானிப்போம். அவர் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுவதைக் குறித்துத் தெளிவாய் அறிந்திருக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியான தீர்மானம் தேவை. அதில் நிலைத்துநிற்க ஆண்டவருடைய கிருபையை நாடுவது தேவை. இன்று தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடுவோம். அதைக் குறித்த உணர்வோடு வருத்தப்படுவோம். தேவன் அதில் பிரியமாயிருக்கிறார். நாம் எழுந்து தீர்மானத்தோடு தேவனுடைய சமூகத்தைக் கிட்டிச் சேருவோம். நிச்சயமாக தேவன் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்வார்.