“நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்” (எஸ்தர் 4:14).

ஒருவேளை நம்முடைய வாழ்க்கையைக் கர்த்தர் நம்மை நல்ல நிலையில் வைத்திருப்பார் என்றால், அது அவருடைய கிருபை. நாம் சுயமாய் நமக்கென்று வாழ இந்த நிலையில் அவர் நம்மை வைக்கவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் இருக்கும் நிலையில் தேவனுடைய ராஜ்யத்திற்குப் பிரயோஜனமுள்ளவர்களாக காணப்படுவது அவசியம். அநேக வேளைகளில் மனிதர்கள் தேவனுடைய ஆசீர்வாதத்தை பெறும்பொழுது அதை தனக்கென்றும் தன் சுயத்திற்கும் செலவிடவிடும்புகிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஒருவேளை இந்த நாட்களில் தேவன் உங்களை ஒரு நல்ல நிலையில் வைத்திருப்பார் என்றால் அது தேவனுடைய கிருபையினால் மாத்திரமே. இந்த நிலையில் நீங்கள் ஆண்டவருடைய ராஜ்யத்திற்கென்று அதை எவ்வாறு உபயோகப்படுத்துகிறீர்கள் என்பதை சிந்திப்பது அவசியம். அவ்விதமாய் நாம் செய்யாமல் போனால் நம் ஆவிக்குரிய சிலாக்கியங்களையும் நன்மைகளையும் இழக்கக்கூடும்.  ஆகவே அதைக் குறித்து நாம் எச்சரிப்படைவது அவசியம். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். உயர்வானாலும் தாழ்வானாலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துவோம்.