“கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்” (1இராஜாக்கள் 18:37).

எலியா தீர்க்கதரிசி ஏறக்குறைய நாணூறு பாகால் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாகத் தேவன் ஒருவரே தேவன் என்று நிருபிக்கதக்கதாக, அவன் மிகப்பெரிய சவாலைக் கொண்டவனாய் இருந்தான். அப்பொழுது அவன் பலிபீடத்தைக் கட்டி, அதின் அருகில் நின்று, அந்த ஜனங்கள் முன்பாக ஜெபிக்கிற ஜெபத்தைப் பார்க்கிறோம். இந்த ஜனங்கள் பாகலின் பக்கமாகத் திரும்பி, தங்களின் மெய்யான தேவனை விட்டு விலகிப் போன ஜனங்கள். ஆனால் பாகால் தேவனல்ல, நீரே தேவன். நீரே சர்வத்தையும் உண்டாக்கினவர் என்று இந்த ஜனங்கள் அறிய வேண்டும் என்ற பாரத்தோடு எலியா தீர்க்கதரிசி அங்கு நின்றுகொண்டிருக்கிறான். அப்போது ஜெபித்த ஜெபமே இது. தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தக் கூடிய ஒரு ஜெபம் இது. அப்போது நடந்த காரியம் 38 -ஆம் வசனத்தில் பார்க்கும்போது “அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.” இவ்விதமான ஜெபத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். இந்த தேவன் யார் என்பதை நம்முடைய வாழ்க்கையில் அறிவதும், நம்முடைய இருதயம் தேவன் பக்கமாக திருப்பப்பட வேண்டியதும் மிக அவசியம்.  தேவனே என்னைத் திருப்பிக் கொள்ளும் என்று அவருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவதும் நல்லது. அப்பொழுது தேவன் நம்மைத் திருப்பிக்கொள்ளுவார். அவ்விதமான ஒப்புக்கொடுத்தலை தேவன் அங்கீகரிப்பார். நம்முடைய வாழ்க்கை சிறந்ததாக காணப்படும். தேவனுடைய நாமம் மகிமைப்படும்.