“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்” (1பேதுரு 1:8).

இந்த வசனத்தின்படி நம் வாழ்க்கையில் ஆண்டவரிடத்தில் அன்புகூற முடிகிறதா? மெய்யாலுமே நம்முடைய வாழ்க்கையில் தேவனிடத்தில் அன்புகூறும் பொழுது நாம் மற்றவர்களில் அன்புகூர முடியாது. மற்ற காரியங்களில் அன்புகூர முடியாது. ஏனென்றால் ஆண்டவரிடத்தில் அன்புகூருவது ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அவருடைய அன்பிற்கு அளவில்லை. இவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்று சொல்லப்படுகிற அவருடைய அன்பை எண்ணிப்பார்க்கும்போது இந்த உலகத்தைப் பார்க்கிலும் அவருடைய அன்பு மேலானது. இந்த உலகத்தில் அவருடைய அன்பை நாம் எண்ணி எண்ணி, ஒவ்வொரு நாளும் அதில் வாழுவதைப் போல ஒரு மகிமைகரமான வாழ்க்கை வேறொன்றுமில்லை. அநேக வேளைகளில் நாம் பாவம் செய்தாலும் அவர் நம்மைச் சிட்சித்துத் திருப்புகிறார். இந்த உலகத்தில் தகப்பனைக் காட்டிலும் தாயை காட்டிலும் நம்மை அதிகமாய் நேசிக்கக்கூடிய ஒரு நபர் உண்டு என்றால் அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. அவருடைய அன்பை நாம் மறந்துவிட முடியாது. அந்த அன்பில் நாம் நிலைத்திருப்போம். நம் வாழ்க்கையின் எல்லாவற்றையும் அவரிடத்தில் ஒப்புவிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாய் செய்கிறார். அன்பானவர்களே! உங்களுடைய தனிப்பட்ட  வாழ்க்கையில் கிறிஸ்துவை அவ்விதமாய் பற்றி வாழுகிற உண்மையான மனமகிழ்ச்சியோடும் கர்த்தருக்குள்ளான சந்தோஷத்தோடும் இரட்சிப்பின் சந்தோஷத்தோடும் இன்று நீங்கள் காணப்படுகிறீர்களா?