கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 4                 சிட்சை                   நீதி 3:1-12

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனை சிட்சிக்கிறது போல,

கர்த்தரும் எவனிடத்தில் அன்பு கூறுகிறாரோ அவனை சிட்சிக்கிறார்”(நீதி 3 : 12)

    தேவன் தம்முடைய மக்களுக்கு சிட்சையை வைத்திருக்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை மனப்பூர்வமாய் தண்டிக்கவேண்டும் என்று சிட்சையை நமக்கு அனுமதிப்பதில்லை. நாம் தேவனை விட்டு விளகும்போதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்னிட்டு செல்லும்போதும், தேவன் நம்மை சிட்சிக்கிறார். ஆம்! உன்மையிலேயே தேவன் நமக்கு கொடுக்கும் ஆசீர்வாதம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இவைகள் நம்முடைய நன்மைக்கென்றும், பிரயோஜனத்திற்கென்றும் தேவனால் அனுப்பப்படும் எத்தனங்கள். நம்மை சுத்திகரிக்கும்படி நமக்கு இவைகள் கொடுக்கப்படுகின்றன. “இவரே தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்திற்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபி 12:10)

   இந்த சிட்சை எந்த உருவத்திலும் நமக்கு தேவன் அனுமதிக்கலாம். அது பணத்தேவையாக இருக்கலாம். வியாதி, இழப்பு போன்ற பலவிதங்களில் அது நமக்குக் கொடுக்கப்படலாம். ஆனால் அவைகளால் நாம் சோர்ந்துப்போகக்கூடாது. மெய்யாலும் “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய் காணாமல் துக்கமாய் காணும்” (எபி 12:11)

    இவ்விதமான வேளையில் நாம் நம்மை ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் இது மிக அவசியமானது. ஆராய்ந்துப் பார்க்கிற வேளையில் தேவ ஆவியானவர் நம்முடைய தற்போதைய ஆவிக்குரிய நிலையை, வீழ்ச்சியை, பாவங்களை உணர்த்திக்காட்டுவார். அப்பொழுது நாம் என்னச் செய்யவேண்டும்? அவைகளுக்காக வருந்தி மன்னிப்புக்கேட்டு மனந்திரும்ப வேண்டும். அவைகளை சரிசெய்ய ஆயத்தமாயிருக்கவேண்டும். அதற்குரிய பெலத்தை தேவனிடத்தில் கேட்கவேண்டும். அப்பொழுது நம் மனந்திரும்புதல் தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். “ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்”  (எபி 12:11) என்பதை நினைவில் கொள்வோமாக.