உலககெங்கும் கொரோனா என்னும் ஒரு கொள்ளைநோய் தேசங்களை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றது. நாடுகளை ஆளும் அதிபதிகளும், ஆட்சியாளர்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள், தலைசிறந்த மருத்துவர்களும் குழம்பி நிற்கிறார்கள், அறிவியலாளர்கள் கைவிரிக்கிறார்கள், பாமர மக்களும் மரணபயத்தோடு வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். மருத்துவமனைகளில் மரண ஓலங்களின் சத்தங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்னவாகும் என்கிற பயம் எல்லோருடைய இருதயத்திற்குள்ளும் தொனித்துக் கொண்டிருக்கிறது.
தப்பித்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் எல்லா மனித ஆலோசனைகளும், பாதுகாப்பு யுக்திகளும் தவிடுபொடியாகின்றது. முற்றிலும் அழிந்து விடுவோமோ என்கிற அச்சம் அகிலமுழுவதும் ஒலித்துகொண்டிருக்கின்றது. இதினிமித்தம் இன்று உலகமெங்கும் கேட்ககூடிய ஒருமித்த கூக்குரல்… எப்படி கொரோனாவிலிருந்து தப்பிப்பது? எவ்வகையான பாதுகாப்பின் மூலம் நம்மை நாம் காப்பாற்றி கொள்ளலாம்? யார் இதிலிருந்து நம்மை விடுவிப்பது? எப்பொழுது இவை முடிவுக்கு வரும்?… என்பதே.


ஏன் கொரோனா?
நாம் இப்பொழுது சந்தித்துவருகின்ற இந்த கொள்ளைநோய் (கொரோனா) மனித இனம் சந்தித்திராத ஏதோஒரு புதுமையானதான பிரச்சனை ஒன்றுமல்ல. உலகவரலாறு முழுவதும் இதுபோன்ற நோய்கள் அவ்வப்போது வந்து மனித இனத்தை அச்சுரித்திக் கொண்டுதான் வந்திருக்கின்றன. மனிதன் இவற்றிற்கு பலதரப்பட்ட காரணங்களை கூறினாலும் முதலாவதாக இப்படிப்பட்ட உயிர்கொல்லி நோய்கள் வரலாறு முழுவதும் சர்வவல்லமை படைத்த தேவனுடைய அனுமதியோடும், சித்தத்தோடும் நடைபெற்று வருகின்றன என்பதை நாம் பிரதானமாக அறிய வேண்டும். இவற்றின் மூலமாக தேவன் இந்த உலக மனிதஇனத்திற்கு பாவத்தின் மீதான தனது எச்சரிப்பின் செய்தியை கொடுத்து வருகிறார் என்பதே நாம் அறியவேண்டிய நிதர்சன உண்மை. இந்த கொரோனா நோயின் மூலமாக தேவன் மனித இனத்திடம் பேசுகிற மிக அடிப்படையான காரியங்களை வேதத்திலுள்ள ஒரு முக்கிய வேத வசனத்தின் மூலம் பார்க்க உங்களை அழைக்கிறேன்.

உலகமெங்கும் கொரோனா | ஒரு வேதாகம பார்வை (Download PDF)