வாரும், மா தேவனே

Come, Thou Almighty King

1 Come, Thou Almighty King,
Help us Thy name to sing,
Help us to praise;
Father all-glorious,
O’er all victorious,
Come and reign over us,
Ancient of days.

2 Come, Thou incarnate Word,
Gird on Thy mighty sword,
Our prayer attend:
Come and Thy people bless,
And give Thy Word success;
Spirit of holiness,
On us descend.

3 Come, holy Comforter,
Thy sacred witness bear
In this glad hour:
Thou, Who almighty art,
Now rule in every heart,
And ne’er from us depart,
Spirit of power!

4 To the Great One in Three
Eternal praises be,
Hence evermore:
His sovereign majesty,
May we in glory see,
And to eternity
Love and adore.

Anonymous

1 வாரும், மா தேவனே,
உம்மைத் துதிக்கவே
துணைசெய்யும்;
உமக்கே கனத்தை,
உமக்கே நன்றியை,
உமக்கே துதியை
செலுத்துவேன்.

2 அநாதி வார்த்தையே,
அன்பாக நித்தமே
என்னோடிரும்;
என்னைப் போதிக்கவும்
உம்மைப்போலாக்கவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
அருள் செய்யும்.

3 மாசற்ற ஆவியே
அடியேன் நெஞ்சிலே
தரித்திரும்;
என் ஆசை அறிவீர்,
குறைவை நீக்குவீர்,
திருப்தியாக்குவீர்
அன்பாகவும்.

4 த்ரியேக தேவனே,
நித்திய ஜீவனே,
உம்மாலேயே
மானிடர் யாவரும்
இகபரத்திலும்
விரும்பும் பாக்கியம்
கிடைக்குமே.

Anonymous