“அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்” (புலம்பல் 3:32).

 நம்முடைய வாழ்க்கையில் அநேக விதங்களில் நாம் சஞ்சலப்படுகிறோம். வருத்தப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். அநேக வேளைகளில் நம்முடைய பாவத்தின் நிமித்தம் கர்த்தர் நம்மை சிட்சிக்க வேண்டியதாய் இருக்கின்றது. இது மெய்யாலுமே நம்முடைய வாழ்க்கையில் அதிக மனவேதனை அளிக்கக்கூடியதுதான். ஆனால் இது முற்றிலும் நம்மை நம்பிக்கை இழக்கக்கூடிய விதத்தில் நம்மில் செயல்படுகின்றதா? ஆனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவரிடத்தில் நாம் தாழ்மையாய்ப் போகும்பொழுது, தம்முடைய மிகுந்த கிருபையின்படி இரங்குகிறார். அவருடைய கிருபைக்கு அளவேயில்லை. ஆண்டவரிடத்தில் திரளான கிருபை உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அநேக வேளைகளில் ஆண்டவரைக் கடினமுள்ளவராயும் பார்க்கின்றோம். ஆனால் அது தவறு. இந்த வேதத்தில் தேவனைப் போல இரக்கமுள்ளவர் யாருண்டு! அவரைப் போல மன்னிக்கிறவர் யாருண்டு! நாம் மெய்யாலுமே நம்மைத் தாழ்த்தி தேவனிடத்தில் போகும்பொழுது நம்முடைய இருதயத்தைப் பார்க்கின்ற தேவன், உடனடியாக உள்ளம் உருகுகிறார். பிழைத்திரு என்றும் சொல்லுகிறார். நமக்கு ஒரு புதிய வழியைக் காட்டுகிறது மாத்திரமல்ல, புதிய நம்பிக்கையும் அவர் கொடுக்கிறார். ஆகவே சஞ்சலப்படும்போது பயப்படாதே. தேவனிடத்தில் போ. அவரிடத்தில் மிகுந்தக் கிருபையும், நம்முடைய வாழ்க்கைக்கு விடுதலையின் வழியும் அவரிடத்தில் இருக்கின்றது. அவரை நம்புகிறவன் ஒருவனும் வெட்கப்படுவதில்லை. கர்த்தர் நல்லவர்.