“அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.” (எஸ்தர் 6:1)

ஒரே ஒரு ராத்திரியில் எவ்விதமான இந்த காரியங்கள் அது மாற்றப்பட்டது என்பதைப் பார்க்கிறோம். ஆம் தேவ மனிதான மொர்தெகாயை தூக்கிலிடும் படியாக திட்டமிட்டிருந்த காரியத்தை குறித்து நாம் வாசிக்கிறோம். ஆமான் எல்லாவற்றையும் சந்தோஷத்தோடு மொர்தெகாயை தூக்கிலிடும் படியாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் ராத்திரியில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால் கால வர்த்தமானங்களை எழுதியிருக்கிற நடபடிகளை கொண்டு வரச் சொல்கிறான். தூக்கம் வராததினால் இவ்விதமான ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். ராஜா தூங்கியிருந்தால் மொர்தெகாய் தூக்கிலிடப்பட்ட நிலைக்கு போயிருக்கக் கூடும். ஆனால் ஒரே ராத்திரியில் தேவன் அந்த நித்திரையை அந்த ராஜாவுக்கு வராதபடி செய்ததிநிமித்தமாக  மொர்தெகாய்க்கு கனத்தையும், ஆமானுக்கு தண்டனையும் கொடுக்கப்படுகிற நிகழ்வை பார்க்கிறோம். நம்முடைய தேவன் மிக வல்லவர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அன்பானவர்களே! நம் வாழ்க்கையில் எவ்வளவு கடுமையான சூழ்நிலைகளை இருந்தாலும் சரி தேவனை சார்ந்து கொள்வதை விட்டு விலகிவிடக்கூடாது. நம் தேவன் மிகப் பெரியவர், வல்லமையுள்ளவர், ஆச்சரியமான காரியங்களை செய்தவர். அற்புதமான விதத்தில் செயல்படக்கூடியவர். அவரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. அவரைச் சார்ந்து வாழ்ந்த மொர்தெகாய் அங்கு தூக்கில் இருந்து தப்ப வைக்கப்பட்டது மாத்திரமல்ல, அவனுக்கு கனத்தையும் கொடுக்கிறார். இரட்டிப்பான ஆசீர்வாதம். ஒன்று தூக்கில் இருந்து விடுபட்ட நிலை மற்றொன்று அங்கு கனப்படுத்தப்படும் நிலை. நாம் எப்பொழுதும் விசுவாசத்தோடு கர்த்தரைப் பற்றிக்கொள்வோமாக.