“இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம், என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும், வேண்டுமென்று எல்லா விதத்ததிலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்” (அப்போஸ்தலர் நடபடிகள் 20:35).

பவுல் தன்னுடைய ஊழியத்தைக் குறித்து இங்கு பேசுகிறார். பவுல் இந்த இடத்தில் எல்லா விதத்திலேயும் உங்களுக்கு நான் காண்பித்தேன் என்று சொல்லுகிறார். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள். ஆவிக்குரிய சத்தியங்களை பேசுகிறார்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் அதுவும் இதுவும் என்று பேசுகிறார்கள். ஆனால் பவுலை போல அவர்கள் அதை வாழ்க்கையில் காண்பிப்பது இல்லை. இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையும் இவ்விதமாகவே  இருக்கிறது. நீ போதிக்கிறதும், நீ சொல்லுகிற சத்தியமும் உன்னுடைய வாழ்க்கையில் காணப்படவில்லையென்றால், அருமையானவர்களே! அது எந்த விதத்தில் உண்மையான ஒரு ஆசீர்வாதமுள்ளதாக  இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் . பவுல் மற்றவர்களுக்காக உழைக்கிறதைக் குறித்து பேசுகிறார். இப்படி பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கும்படியாக வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே ஆசீர்வாதம் என்று சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையைக் குறித்து யோசிக்கவேண்டும்.  அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் வெறும் வார்தைகளினால் பக்தியை வெளிப்படுத்துகிறவர்களாக இருப்பது மிக வருத்தமான காரியம். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள்  இவ்விதமாக வாழுவது மிக வருத்தமான காரியம். அவ்விதமான மக்களுடைய வாழ்க்கையில் மெய்யான இரட்சிப்பைக் குறித்தும் நாம் சந்தேககிப்படுவது உண்மைதான். பவுல் நீங்கள் அறிந்திருக்கிறபடி எனக்கும் என்னோடே கூடி யிருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்த கைகளே வேலைசெய்தது என்று பார்க்கிறோம். மற்றவர்களைத் தாங்கவேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்ததுமாத்திரமல்ல, அதற்காக பவுல் தன்னுடைய காரியங்களை தன்னுடைய கைளினால், வேலைசெய்து காப்பாற்றுகிறதைப் பார்க்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மேலான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை. இதுவே மெய்யான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு அடையாளம் என்பதை விளங்கிக்கொண்டு, நம் வாழ்க்கையை சீர்தூக்கி செம்மைப்படுத்தி வாழக் கற்றுகொள்ளுவோம்.