“அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது. நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (ஆகாய் 1:9).
ஆண்டவருடைய ஊழியத்தைக் குறித்தும், ஆண்டவருடைய காரியங்களைக் குறித்தும் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதன் அக்கறையில்லாமல் வாழ முடியுமா? இல்லை. நம்முடைய வாழ்க்கையில் என்றைக்கு நாம் இரட்சிக்கப்படுகிறோமோ அப்பொழுதே ஆண்டவருடைய பிள்ளையாக மாறிவிடுகிறோம். நம்மை இரட்சித்து மீட்டுக்கொண்டவர் நம்மை விலைக்கிரயம் கொண்டு வாங்கினார். மெய்தான், நாம் இந்த உலகத்தில் உழைத்து வாழுவதை வேதம் தடை செய்யவில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் அதற்காக மாத்திரமே வாழுகின்றோமா? இன்றைக்கு அவருடைய பணி தொய்விலிருக்கிறது. ஆனால் நாம் அதைப் பற்றி வருத்தப்படுவதில்லை. நம்முடைய காரியங்களைக் குறித்து நாம் வருத்தப்படுகிறோம். அதினால் நாம் எதிர்பார்க்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில்லை. தேவனே இதைச் செய்கிறார். ஏன் அவர் இவ்விதமாய் செய்கிறார்? நம்முடைய வாழ்க்கையில் நாம் உணர்வடைந்து, தேவன் பக்கமாகத் திரும்பவும், அவருடைய ஊழியத்தின் காரியங்களிலும் நாம் அக்கறையுள்ள சிந்தையோடு வாழுவதற்கு தேவன் எதிர்பார்க்கிறார். நாம் அவருக்கு ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே உம்முடைய இராஜ்ஜியத்தின் பணியில் என்னை எந்த விதத்தில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்விதமாக உபயோகப்படுத்தும் என்று ஜெபிப்போம்.