கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 24                         சொல்லியபடியே செய்வார்              1 இராஜா 5:1-12

“கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியபடியே

அவனுக்கு ஞானத்தைக் கொடுத்தார்” (1இராஜா 5:12)

    சொல்லியிருந்தப்படியே தந்தருளினார் இதுவே விசுவாச வாழ்க்கைக்கு அடையாளம். சொல்லியிருந்தபடியே செய்தார் தேவனுடைய வார்த்தைகளை, வாக்குத்தத்தங்களை நாம் அப்படியே நம்புகிறோம். அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ? வேதாகமத்தை நாம் வாசிக்கும்பொழுது நாம் அந்த உணர்வோடு வாசிக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளை நூற்றுக்கு நூறு நம்பாதவன் ஒரு மெய்யான விசுவாசியாக வாழுவது மிக கடினம். இன்றைக்கு வேதத்தில் அதில் குறை இருக்கிறது. இதில் குறை இருக்கிறது என்று சொல்லும் எந்த தேவ ஊழியனையும் நம்பாதே. அவ்விதமான ஊழியர்கள் வேத புரட்டர்கள், தேவபகைஞர்கள். வேதம் முழுவதும் தேவனுடைய வார்த்தை, தேவன் சொன்னவைகள் என்று உறுதியான விசுவாசம் தேவை.

    இன்றைக்கு அநேகர், நான் அவ்விதம் சந்தேகிக்கவில்லை என்று சொன்னாலும், அவர்கள் அவ்விதம் வேதத்தை மனப்பூர்வமாக ஏற்று அதற்கு ஒப்புக்கொடுப்பதில்லை. ஆம்! நீ அவ்விதம் ஒப்புக்கொடுக்காதபோது மறைமுகமாக அதன் நம்பகத்தன்மையை மறுக்கிறாய். நீ தேவனுடைய வார்த்தையை வாசித்தும் அதற்கு கீழ்ப்படிய மறுக்கும்போது, தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்துகிறாய். ஆகவே நீ கருத்தோடு தேவனுடைய வார்த்தையை சிந்திப்பதில்லை, தியானிப்பதில்லை.

    சாலொமோன்  தேவனுடைய வார்த்தையைக் குறித்து இவ்விதம் சாட்சிபகரும்படியாக இது இருக்கிறது என்பதை மறவாதே. தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதல் அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையாகிலும் தவறிப்போகவில்லை (1இராஜா 8:56). என்று சாலொமோன் சொன்னார். ஒரு வார்த்தையாகிலும் எழுத்தாகிலும் நிறைவேறாமல்  போகாது என்று இயேசு சொன்னார் என்பதை மறவாதே.