நீங்கள் தேவனோடு ஒப்புரவான நபரா?

Are you reconciled with God?

By Dr. David Elangovan

 

           “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:10). “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:10). ஒப்புரவாகுதல் என்பது இரண்டு நண்பர்கள் சண்டையிட்டுப் பிரிந்து போவார்களானால், மறுபடியுமாக ஒப்புரவாக வேண்டிய அவசியம் உண்டு. அதைப்போலவே வேதம் சொல்லுகிறது, மனிதனானவன் தேவனோடு கலகம் பண்ணி பிரிந்து சென்றவன். அவன் மறுபடியுமாக தேவனோடு ஒப்புரவாக வேண்டியது அவசியம். ஆகவேதான் பவுல் தேவனோடு ஒப்புரவாகுதலைக் குறித்துப் பேசுகிறார். இப்பொழுது நான் உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். நீங்கள் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட நபரா? இல்லையா? இதை நான் எப்படி அறிந்துகொள்ளுவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆகவே இந்த சிற்றேட்டின் மூலமாக ஒரு மனிதன் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டவனா?இல்லையா? என்பதை வேத வசனங்களின் அடிப்படையில் உங்களுக்குச் சித்தரித்துக் காட்ட விரும்புகிறேன். நாம் ஏன் தேவனோடு ஒப்புரவாக வேண்டும்?  தேவன் மகா பரிசுத்தமுள்ளவர், நீயும் நானும் தேவனுக்குச் சத்துரு. ஆகவே நீயும், நானும் தேவனோடு ஒப்புரவாக வேண்டியது அதிமுக்கியமான ஒன்றாகும். இதைத்தான் வேதம் எவ்வளவு அழகாக சித்தரிக்கிறது என்று பாருங்கள், “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 

 

நீங்கள் தேவனோடு ஒப்புரவான நபரா? (PDF) – Click to Download