நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?

Are you born again?

By Dr. David Elangovan

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா?

யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாவது அதிகாரத்தை மையமாகக்கொண்டு மறுபிறப்பு என்றால் என்ன? என்பதைப் பற்றியும், ஒருவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானா? இல்லையா? என்பதைக் குறித்தும் இந்த சிற்றேட்டில் பார்ப்போம். இந்த செய்தியின் அடிப்படையில், நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களா? நீங்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கக் கூடிய நிலையில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே சோதித்தறிந்து கொள்ளலாம். நிக்கொதேமு என்ற தேவமனிதன் அல்லது பெரிய போதகன் இயேசுவினிடத்தில் வந்து ஒரு காரியத்தை சொல்லுவதை நாம் பார்க்கிறோம். “அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்” (யோவான் 3:2). ஒருவேளை அவன் இவ்விதமாக சொல்லும்பொழுது இயேசுவானவர் மகிழ்ந்து தன்னை மெச்சிக்கொள்ளுவார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவனுடைய ஆழமான ஆத்தும நிலையை ஊடுருவிப் பார்த்து ஒரு காரியத்தை சொன்னார். “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 3:3). 

 

நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்களா? (PDF) – Click to Download