கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 5             நியமிக்கப்பட்டவர்கள்         அப் 13 ; 40 – 48

“நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்

எவர்களோ அவர்கள் விசுவாசத்தார்கள்” (அப்  13 : 48)

      பொதுவாக இன்றைக்குச் செய்யப்படும் அநேக கிறிஸ்தவப் போதனைகள் இந்த சத்தியத்திற்கு வித்தியாசமானது. ஒருவேளை நீங்கள் எப்படி வித்தியாசமானது என்று கேட்கலாம். அருமையானவர்களே! பின்வரும் விளக்கத்தை நீங்கள் கருத்தாய் அறியவேண்டும். என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்ப்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:14). இங்கு விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று வேதம் சொல்லுகிறது. வேதம் உலகத்தார் அனைவரும் விசுவாசிப்பார்கள் என்று ஒருபோதும் சொல்லவில்லை. நாமும் நம்மைச் சுற்றிலும் உள்ள அநேகர் இயேசுவை விசுவாசிக்கவில்லை என்று அறிந்திருக்கின்றோம். பிறகு யார் தான் இரட்சிக்கபபடுவார்கள் என்ற கேள்விக்கு பதிலாக நாம்  அப் 13 :48ஐ  பார்க்கிறோம்.

   நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்’ ஆகவே முதலாவது நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்படுதல், இரண்டாவது விசுவாசித்தல். இந்தத் தெரிந்துகொள்ளுதலின் சத்தியத்தை வேதத்தில் நாம் தெளிவாகக் காண்கிறோம். தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம்’எபேசிய 1 : 12). தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். (எபே 1:6). இந்த உலகத்தில் எல்ல மனிதர்களும் இரட்சிக்கபடமாட்டார்கள். அப்படியானால் யார் ரட்சிக்கப்படுவார்கள்? தேவன், யார் யாரையெல்லாம் முன்குறித்திருக்கிறாரோ அவர்கள் அனைவரும் விசுவாசிப்பார்கள். விசுவாசிக்கிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். நீ மெய்யான விசுவாசியா? உன் அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிரு. ( 2 பேதுரு 1 : 10 ).