“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33).

ஒரு மெய் கிறிஸ்தவனின் வாழ்க்கையில் காணப்பட வேண்டிய அதி முக்கியமான தன்மை இது. அவன் ஒரு காலத்தில் உலகத்தையும் அதின் சிற்றின்பங்களையும் தேடி வந்தவன். மனசும் மாம்சமும் விரும்பினவைகளைச் செய்துவந்தவன். ஆனால் இப்பொழுது அவன் முக்கியத்துவம் மாறிவிட்டது. அவன் இருதயத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றத்தின் நிமித்தமாக, அவைகளை முதலாவது வைப்பதில்லை. இப்பொழுது அவனுடைய முதலாவது நோக்கம் தேவன் மாத்திரமே. அவருடைய வழியும் சித்தமுமே முதலாவது வைக்கிறவனாய் இருக்கிறான். அவன் இந்த உலகத்தின் காரியங்களின் வெறுமையை அறிந்து கொண்டான். அது அழிந்து போகக் கூடியது. அது ஆத்துமாவுக்குப் பிரயோஜனமுள்ளதல்ல. ஆனால் இப்பொழுது அவனுடைய வாழ்க்கையில் மெய் திருப்தியை, சமாதானத்தைக் கொடுக்கக் கூடிய தேவனை அவன் முதலாவது தேட ஆரம்பித்துவிட்டான்.  அவன் மறுபடியும் பழைய காரியங்களை வாஞ்சிக்க மாட்டான். ஏனென்றால் அவன் மெய்யாய் இரட்சிக்கப்பட்டவன். மெய்யாய் மனந்திரும்பியவன். இதுவே இரட்சிப்பின் மகத்துவமும் மேன்மையுமாயிருக்கிறது.