“உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்” (உபாகமம் 25:19).

அநேக வேளைகளில் நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சந்தோஷமாய் சமாதானமாய் இருக்கும்பொழுதும் நாம் செய்யும்படியான ஆவிக்குரிய பணிகள் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். தாவீது போருக்குச் செல்லாமல் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருந்த வேளையில் தன் இச்சையில் விழுந்துவிட்டான். நாம் இளைப்பாறுதல் அடையும்போது நாம் சோம்பாலாய் இருக்கக் கூடாது. தேவனுக்காக நாம் செய்யும்படியான பணிகள் உண்டு. நமக்கு எதிராய்ச் செயல்படுகிற நம் மாம்ச சிந்தையை அழிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒருபக்கம் கட்டிக்கொண்டிருக்கிறோம் இன்னொரு பக்கத்தில் அழிக்க வேண்டியதை அழித்துக்கொண்டிருகிறோம். இவை இரண்டும் நம்முடைய வாழ்க்கையில் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். ஆகவே தேவன் இந்த காலங்களில் உங்களுக்கு இளைப்பாறுதலும் சமாதானமும் கொடுத்திருப்பார் என்றால், உறங்கிவிடாதீர்கள். ஆவிக்குரியப் பணிகள் உண்டு. எப்பொழுதும் சாத்தான் விழிப்புள்ளவனாய் இருக்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது. சீரான ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை நமக்கு நல்லது. தேவன் அவ்விதமாக நம்மை ஆசீர்வதிப்பாராக.