க்டோபர்  22                                         வேறே விருப்பமில்லை                                         சங்கீதம் 73 : 16 – 28

‘பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.’ ( சங்கீதம் 73 : 25 )

நீ மெய்கிறிஸ்தவனா என்பதற்கு அநேக பரிசோதனைகளை தேவன் வேதத்தில் வைத்திருக்கிறார். அவைகளைக் கொண்டு உன்மையான தேவ பிள்ளைகளை கண்டுக் கொள்ளமுடியும், அவர்களும் தங்களை அவ்விதம் அறிந்து சோதித்து உணரமுடியும். அவைகளில் ஒன்றை இந்த வசனம் சொல்லுகிறது.

அவன் பரலோகத்தில் மெய் நம்பிக்கையுள்ளவனாக இருப்பான். தன் மரணத்திற்கு பின்பாக தொடர்ந்து வாழும்படியான அந்த இடத்தை குறித்து அவன் நிச்சயமுள்ளவனாக இருப்பான். மேலும் இந்த உலகத்தில் வாழ்ந்துவருகிற நாட்க்களில் ஆண்டவர் இயேசுவோடு ஜீவனுள்ள மெய்யான ஐக்கியமுள்ள ஜீவியம் செய்துவருவான். தன்னுடைய இந்த பூலோக நாட்கள் முடிந்த பின்பு தான் இத்தனை நாட்க்களாக நேசித்து பிரியம் வைத்து இனிமையான உறவுகொண்டிருந்த தன் நேசரை சந்திப்பேன் என்கிற உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருப்பான். அநேக சமையங்களில் இங்கு வாழும்படியான நாட்களில் இதன் மூலம் மகிழ்ச்சி பெறுவான். உலகம் கொடுகக்கூடாத சமாதானம் ஒரு சிறிய பரலோகம்போல அவன் ஆத்துமாவை குளிரச் செய்கிறதை அறிந்திருக்கிறான்.

அது மாத்திரமல்ல அவனுக்கு இயேசுவைத் தவிர இந்த உலகத்தில் வேறொன்றிலும் அதற்கு மேலான விருப்பம் இருக்காது. அவருக்குப் பிரியமாய் ஒவ்வொரு நாளும் வாழவேண்டும் என்று வாஞ்சிப்பான். அவருடைய அன்பில் நிலைத்திருப்பதே அவனுடைய மேலான நோக்கமாக இருக்கும். ‘இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புக்கூர்ந்து எனக்காகத் தம்மைதாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். (கலாத்தியர் 2 : 20) இந்த உலகத்தில் சங்கீதக்காரனைப் பால பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை என்று முழு மனதுடன் உன்னால் சொல்லமுடியுமா?