தேவன் தம்முடைய ஆவியைக் கொண்டு மனிதர்கள் மூலமாக தம்முடைய வார்த்தையை எழுதி இருக்கிறார். ஆகவே வேதாகமம் மற்ற  புத்தகங்களை விட முற்றிலும் வேறுப்பட்ட தனித்தன்மை வாய்ந்தது. வேதாகமத்தில், அதின் ஒவ்வொரு வார்த்தையும் அதன்  உறுப்பும் தேவனால் எழுதப்பட்டது என்பைதை வேதாகமம் முற்றிலும் அங்கீகரிக்கிறது(I கொரி 2:12,13 II தீமோ3:16,17). சிலர் வேதாகமத்தின் ஒரு பகுதி மாத்திரம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்று சொல்லுவது முற்றிலும் தவறு. வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது(II தீமோ3:16,17). ஆகவே ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அனைத்தும் புத்தகங்களும் தேவ ஆவியினவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டது.

தேவனுடைய வார்த்தை நம்மை மாற்றவும், நம்மை தேறினவர்களாக நிறுத்தவும் வல்லமையுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் மத்தேயு 5: 17, 18 வசனங்களில் “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று சொல்லுகிறார். ஆகவே தேவனுடைய வார்த்தை தவறிழைக்காததும், அதிகாரமுள்ளதுமாய் இருக்கிறது.