வேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை எது நிரூபிக்கிறது?

1.நிறைவேறின தீர்க்கதரிசனங்கள்:

வேதாகமத்தில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருப்பதை நிரூபிக்கின்றது. உதாரணமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஏறக்குறைய 300 தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவைகளில் அநேகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையிலேயே நிறைவேறி இருக்கின்றன. இன்னும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசன வார்த்தைகள் உண்டு.

2.வேதாகமத்தின் ஒற்றுமை:

வேதாகமமானது 40 மனிதர்களை கொண்டு 1600 ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டது. இந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமானவர்கள். உதாரணமாக மோசே ஒரு சமூகத் தலைவன், தாவீது ஒரு ஆட்டு மேய்ப்பன், சாலமோன் ஒரு ராஜா, ஆமோஸ் பழங்களை பொருக்குகின்றவன், தானியேல் ஒரு பிரதம மந்திரி, மத்தேயு ஒரு வரி வசூலிப்பவன், லூக்கா ஒரு மருத்துவர், பவுல் ஒரு ரபி, பேதுரு மீன் பிடிப்பவன். மேலும் வேதாகமம் மூன்று கண்டங்களில் (ஐரோப்பா, ஆசியா, ஆப்பரிக்கா) எழுதப்பட்டது. ஆனாலும் கருத்துகளில் எந்த வித முரண்பாடுகள் இல்லாத ஒற்றுமையை பார்க்கின்றோம்.

3.வேதாகமம் உள்ளது உள்ளபடியே சொல்லுகிறதாக இருக்கின்றது:

தாவீதை வேதாகமத்தில் ‘கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷன்’ (I சாமு 13:14) சொல்லியிருக்கிறது. ஆனாலும் தாவீது செய்த விபச்சாரத்தையும், கொலையையும் மறைக்காமல் சொல்லுகிறது(II சாமு 11:1-5, 14-26).

4.புதைபொருள் ஆராய்ச்சி:

புதைபொருள் ஆராய்ச்சி வேதாகமத்தின் காரியங்களை நிரூபிக்கின்றதாக இருக்கின்றது. ஆரம்ப காலங்களில் விஞ்ஞானிகள்  பூமி தட்டையானது என்று எண்ணினார்கள். ஆனால் பூமி உருண்டையானது என்பதை அதற்கு முன்பாகவே வேதாகமம் சொல்லியிருக்கிறது (ஏசாயா 40:22).

5.சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ்

முதல் நூற்றாண்டு இஸ்ரவேலின் சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ் எழுதியிருக்கிற அநேக காரியங்கள் வேதாகமத்தோடு ஒத்திருப்பதை பார்க்கிறோம்.

ஆகவே இவைகள் வேதாகமம் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நிரூபிக்கிறது