பிப்ரவரி 4                                       விக்கிரகங்கள்                                             யாத் 32 : 1 – 8

அவர்கள் தங்களுக்கு ஒரு மன்றுக்குட்டியை வார்பித்து, அதை மணிந்துக்கொண்டு, அதற்கு பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள்,’ (யாத் 32 : 8)

மோசே தேவனிடத்திலிருந்து பிரமானங்களை பெறும்படியாக மலையின்மேல் ஏறிபோய் தேவனிடத்தில் காத்திருந்த நேரத்தில், இஸ்ரவேல் மக்கள் செய்தவைகளை இந்தப் பகுதியில் வாசிக்கிறோம். இன்றும் அநேகர் இவ்விதமாகவே செயல்படுகிறர்கள். ஜீவனுள்ள தேவன் எவ்விதம் இந்த மக்களை அநேக அற்புதங்கள் அடையாளங்களைக் கொண்டு வழிநடத்தி வந்தார் என்பதை இதற்கு முந்திய அதிகாரங்களில் வாசிக்கிறோம். ஆனாலும் அவர்கள் மெய்யான தேவனை சார்ந்துக் கொள்ளாமல் வெறுமையான கைகளால் செய்த விக்கிரகங்களையே சார்ந்துக் கொள்ள அவர்கள் இதயம் திரும்பியது.

உன்னையும் தேவன் எவ்வளவு ஆச்சரியவிதமாக இம்மட்டும் வழிநடத்தி வந்திருக்கிறார்! உன்னுடைய குடும்பத்தை எவ்விதம் தாங்கி செய்ல்படுகிறார் ஆனால் இன்று நீ இந்த மெய்யான தேவனைச் சார்ந்துக்கொள்ள தவறுகிறாய். தேவனை வைக்கவேண்டிய இடத்தில் வேறு எதை வைத்தாலும் சரி அது விக்கிரகம்தான். ஒரு வேளை இந்த மக்களைப்போல கையால் செய்யப்பட்ட விக்கிரகங்கலையல்ல, கையால் செய்யப்படாத விக்கிரகங்களை நீ சார்ந்துக் கொள்ளலாம். மனிதனுடைய இருதயம் எப்போதும் மெய்யான தேவனை விட்டு பொய்யானவைகளையே சார்ந்துக்கொள்ளப்பார்க்கிறது.

இன்றைக்கு கணக்கிலடங்காத விக்கிரகங்களை கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு ஜீவனுள்ள தேவனை சார்ந்துக் கொள்ளாதவர்கள், அவர்களுடைய இருதயங்களில் அவைகளை வைத்திருக்கிறார்கள். பணம், பெருமை, மற்ற மனிதர்களைச் சார்ந்திருத்தல், சுயம், சுயவை, சுய ஞானம் என்று கணக்கிலடங்காத விக்கிரகங்கள். தேவன் இருக்கவேண்டிய இடத்தில் இவைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இவைகள் ஒருபோது வெற்றியோடே உங்களை வழிநடத்தி செல்லாது. உன் விக்கிரகங்கள் எவை? தேவனிடத்தில் திரும்பு. தேவன் உனக்கு இரங்குவார்.