ஆகஸ்ட்  29                                                      பெலப்படுத்துகிற கிறிஸ்து                                                     பிலிப்பியர் 4 : 1–13

‘என்னை பெலப்படுத்திற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு’ (பிலி 4 : 13)

‘என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்து’ என்று பவுல் சொல்லுவது எவ்வளவு உன்னதமான வார்த்தையாக இருக்கிறது. நான் பெலவீனன் தான். என் பெலன் இந்த மகா பெரிய கனமான ஊழியத்திற்குப் போதாதுதான். ஆனால் கிறிஸ்து என்னை பெலப்படுத்துகிறார். நான் நிறவேற்றவேண்டிய அநேக காரியங்கள் உண்டு. அதற்கு மிகவும் அதிகமான பெலன் தேவை. இவையெல்லாவற்றிற்கும் என்னை பெலப்படுத்துகிறவர் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான்.

ஒரு கிறிஸ்தவன், தான் நிறைவேற்றவேண்டிய பணி இவ்வுலகில் மிகவும் பெரியது என்பதை அறிந்திருக்கிறான். அவன், ஒவ்வொருநாளும் அதற்கு வேண்டிய பெலனை இயேசுவினிடத்தில் பெற்று வாழ்கிறவனாய் இல்லையென்றால் அவன் ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தனாக வாழமுடியாது. உன்னையே நீ நோக்கிக்கொண்டிராதே உன்னுடைய வார்த்தைகள் உன் பலவீனத்தை அதிகம் வெளிப்படுத்தும் வார்த்தைகளாக, அவ்விசுவாசத்தின் வார்த்தைகளாக இருக்கவேண்டம் தேவன் அநேக சமையங்களில் நாம் ‘ கிறிஸ்து என்னுடைய பெலன்’ என்று அறிக்கைசெய்யும்படி, நம்மில் பலவீனத்தை அனுமதிக்கிறார். அந்த வேளையில் நாம் சோர்ந்து போகாமல் பெலன்பெற இயேசுவை நோக்கிப் பார்ப்போமானால் நாம் வெட்கப்பட்டு போகமாட்டோம்

இந்த தேவன் தன்னை பெலப்படுத்துவது மாத்திரமல்ல, அந்த பெலன் தம்மில் பூரணமாய் பெருகிற்று என்று பவுல் சொல்லியிருக்கிறார். (1தோமோ 1 : 12,14) இந்த தேவனுடைய பெலன் உனக்கு குறைவானதாகவல்ல நிறைவாய் கட்டளையிடப்படும் பவுலின் வாழ்க்கையில் மாத்திரமல்ல உன்னுடைய வாழ்க்கையிலும் தேவன் அவ்விதமான சாட்சியை கொண்டிருக்கும்படி உன்னைப் பெலப்படுத்துவார். நீ எந்தசூழ்நிலையிலும் தேவனை நோக்கிப்பார். உன்னை கர்த்தர் பெலப்படுத்தி வழிநடத்துவார்