ஆகஸ்ட்  9                                      நான் புறம்பே தள்ளுவதில்லை                       யோவான்  1 : 40 — 51

‘என்னிடத்தில் வருகிறவனை நான் புறமே தள்ளுவதில்லை’ (யோவான் 1 : 37)

நரகத்தில் இருக்கும் எந்த ஒரு மனிதனும் ‘நான் இயேசுவண்டை போனேன், ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று சொல்லக்கூடுமா? இல்லை, ஒருபோதும் அப்படி சொல்லமுடியாது. அவர் தம்முடைய வார்த்தையில் உண்மைய்டுள்ளவர். அவர் அவ்விதன் ஒருவரையும் அலட்சியப்படுத்த தள்ளிவிடமாடார். மனிதர்கள் அவ்விதம் செய்வார்கள். ஆனால் தேவன் அப்படி செய்கிறவரல்ல என்பதில் நாம் உறுதியாக இருக்கமுடியும்.

ஒருவேளைநீ, நான் அவரிடத்தில் வருவதற்கு என்னிடத்தில் எந்த தகுதியும் இல்லையென்று சொல்லுகிறாயா?தேவனுடைய வார்த்தையின்படி, இவ்விதம் சொல்லுகிற நீ அஸ்வற்றிடத்தில் வரும்படியாக எதிர்ப்பார்க்கிறார். என்னை நான் சரிபடுத்திக்கொண்டு வருகிறேன் என்று சொல்லுகிறாயா? நீ உள்ளது உள்ளப்படியே வா என்றுதான் ஆண்டவர் அழைக்கிறார். நீ உன்னை சரிப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லவில்லை. உன்னை சரிபடுத்தவே உன்னை அவரிடத்தில் வா என்று அழைக்கிறார். அவரிடத்தில் வந்து ஆவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொருவரையும் கேட்பீர்ரானால் அவர்களும் உள்ளது உள்ளப்படியே இயேசுவினிடத்தில் சென்றேன் என்றே சாட்சி பகருவார்கள்.

நாம் ஜெபிக்கும் ஜெபம், நம்முடைய துதிகள் குறவுள்ளவைகள். ஆனாலும் அவைகள் எனக்கு வேண்டாம் என்று தேவன் சொல்லுவதில்லை. நாம் நம்முடைய குறைவுகளை உணர்ந்து சொல்லுவது அவருக்கு இன்னும் பிரியமனது. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கனியீர், (சங்க் 51 : 17 ) நாம் ஜெபிக்கும் ஜெபம், நம்முடைய துதிகள் குறவுள்ளவைகள். ஆனாலும் அவைகள் எனக்கு வேண்டாம் என்று தேவன் சொல்லுவதில்லை. நாம் நம்முடைய குறைவுகளை உணர்ந்து சொல்லுவது அவருக்கு இன்னும் பிரியமனது. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கனியீர், (சங்க் 51 : 17 ) என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறதில்லை என்று சொன்ன என் இரட்சகரே உம்மிடத்திற்கே வருகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும் என்று ஜெபி. தேவன் உன்னை ஒருபோதும் தள்ளாமல் ஏற்றுக்கொள்ளுவார். அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிற உண்மையுள்ள தேவன் என்பதை மறவாதே.