அக்டோபர் 10              தேவனின் திட்டம்         ஆதி  12 : 1 – 8

          ’ கர்த்தர் ஆபிராகாமை நோக்கி, நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டயும் விட்டு புறப்பட்டு                   நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.’ (ஆதி 12 : 1)

இது தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த தனிப்பட்ட அழைப்பு. தேவனை அறியாது விக்கிரகங்களைத் தொழுதுக்கொண்டு வந்த மக்களிலிருந்து தேவன் ஆபிரகாமை அவ்விதம் அழைத்தார். இன்றைக்கு நநேகர் தேவனின் இவ்வித்மான அழைப்பை அங்கிகரிப்பதில்லை.’ பொதுவாக தேவன் எல்லாரையும் வழிநடத்துகிறார். தனி மனிதனுக்கென்று தெவனின் திட்டம் என்று, ஒன்று இல்லை. நாம் அதை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை’ என்று எண்ணுகிறார்கள். இவர்கள் நோக்கமற்ற கிறிஸ்தவர்கள்இவர்கள் உலகபிரகாரமான காரியங்களில், நோக்கத்தோடே செயல்படுவார்கள். ஆனால் தேவன் தன்னுடைய வாழ்க்கையில் என்ன எதிர்ப்பார்க்கிறார்? என்றும் தேவன் என்ன நோக்கத்தோடே என்னைத் தெரிந்துக் கொண்டிருக்கிறார்? என்று எண்ணிப்பார்க்கமாட்டார்கள். நீ அவ்விதம் வாழும் கிறிஸ்தவனா? தேவன் உனக்கென்று வைத்திருக்கும் நோக்கத்தை அறிந்து, அவருக்குப் பிரியமாய் வாழ உனக்கு வாஞ்சையில்லையா?.

ஆபிரகாமுக்கு அழைப்புக்கொடுத்தபோது அவன் அதற்கு கீழ்படிந்தான். எப்படி அவனால் கீழ்படியமுடிந்தது? விசுவாசத்தினால்தான். அன்னை அழைக்கும் தேவன் தன்னை உன்னதமான நோக்கத்திற்கு அழைக்கிறார். என்றும் அவர் தன்னை வழிநடத்துவார் என்றும் விசுவாசித்தான். மெய் விசுவாசம் எல்லத்தடைகளையும் மேற்க்கொள்ளும். அவன் எடுத்த வைக்கவேண்டிய அடி மிகபெரியதாய் இருந்தது. தன் தேசத்தை, செழிப்பை, மக்களை விட்டு இன்ன இடம் போகிறோம் என்பதை அறியாமல் தேவனுக்குக் கிழ்படியவேண்டியிருந்தது. விசுவாசமில்லாதவன் கீழ்படியமாட்டான், ஆயிரம் சக்குபோக்குச் சொல்லுவான். நீ அவ்விதம் சக்குபோக்குச் சொல்லுகிற கிறிஸ்தவனா இராதே. தேவனுக்குக் கீழ்படி. அப்பொழுது ஆசீர்வதிக்கப்படுவாய். தேவாதி தேவனுக்குக் கீழ்படிந்தவர்கள் ஆபிரகாமைப் போல நிச்சயமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள், சந்தேகமேயில்லை.