செப்டம்பர்  8                                                         திடமனது                                                          யோசுவா 1 : 1 – 9

‘பலங்கொண்டு திட மனதாயிரு’ (யோசு 1 : 7)

 

‘திடமனது’ என்பது தைரியத்தைக் குறிக்கிறது. யோசுவா, மிக பெரிய பணியை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் தேவன் யோசுவாவை பார்த்து இவ்விதம் சொன்னார். பலங்கொள்ளாமல் திடமனது வராது. ஆனால் இந்த பலம் எங்கிருந்து வரும்? இது மனித பலம் அல்ல, தேவ பலம். இது தேவனிடத்திலிருந்து மட்டுமே நமக்குக் கிடைக்கும்.

இதைச் சொல்லுகிறவர் யார்? தேவன். தேவாதி தேவன். அவர் சொன்னால் செய்கிறவர். நீ இவரைச் சார்ந்துக்கொள்ளமுடியும். யோசுவாவைப் போல நீ நிறைவேற்றவேண்டிய பணி மிகப்பெரிய பணியாய் இருக்காலாம் அல்லது நீ செய்யவேண்டிய எந்த காரியமாக்க் இருந்தாலும் அவர் பெலன் கொடுப்பார். அதன் மூலம் நீ திடமனதாய் இருக்கலாம். ஒரு வேளை நீ அநேக காரியங்களின் மத்தியில் சோர்ந்து போகலாம் அல்லது சோர்ந்து போயிருக்கலாம். ஆனால் தேவன் சொல்லுகிறார் ‘சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தையும் பெருகப்பண்ணுகிறார். (ஏசாயா 40 : 29)

சங்கீதக்காரன் கர்த்தர் என் பெலன் என்று சொல்லுகிறார். இன்று அநேகர் கர்த்தரை தன் பெலனாக கொள்ளாததினால் எதற்கும் பயப்படுகிறார்கள். திடமனது என்பது அவர்களில் இருப்பதில்லை. எதற்கெடுத்தாலும் பயம். எதிர்காலத்தைக்குறித்த பயம். நீ உன்னுடைய வாழ்க்கையில் தேவனை பெலனாக கொண்டிருக்கிறாயா? அநேகர் தேவனை அல்ல தங்களின் சுய பெலத்தையும் செல்வத்தையும் சார்ந்திருக்கிறார்கள். அவர்களைக்குறித்து வேதம் என்னசொல்லுகிறது? தேவனை தன் பெலனாக எண்ணாமல் தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன் என்றும் இன்னுமாக இவர்களுடைய முடிவைக்குறித்து ‘தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்த்கிலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார்’ (ச்சங்கீதம் 52 : 5) கர்த்தர்மேல் நம்பி8க்கை வைத்து, ‘கர்த்தரைத் தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்’ (எரேமியா 17 : 7).