பிப்ரவரி 15                                  தாழ்மையின் பலன்                                        நீதி 22 : 1 – 11

‘தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்’ (நீதிமொழிகள் 22 : 4)

இங்கு இரண்டு அருமையான தெவீகப் பண்புகள் சொல்லப்படுகிறது. ஒரு கிறிஸ்தவன் ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் வளரவேண்டும். இன்றைக்கு அநேகக் கிறிஸ்தவர்கள் மாம்சக் கிறிஸ்த்தவர்களகவே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில், குடும்ப உறவுகளில் பிரச்சனை. உன் நிலை இவ்விதமாக இருக்குமானால் அன்பானவரே! இன்னும் மாம்ச கிறிஸ்தவனாக வாழவேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்துக்கொள். உனக்கு எவ்வளவு வளரும்படியான வாய்ப்புகள் இருந்தும் அதை பயன்படுத்தாதபோது அது உனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை உணருவாயானால் உனக்கு நலமாயிருக்கும்.

மேலும் இந்த வசனத்தில் தாழ்மைக்குக் கிடைக்கும் பலனப் பாருங்கள். இயற்கையாக மனிதன் தாழ்மையை விரும்புவதில்லை. ஆனால் தேவன் தாழ்மையைதான் உன்னிடத்தில் கேட்கிறார். தாழ்மைக்கு கிருபையளிக்கிறார். பெருமையுள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கிறார். நீ தாழ்மையைத் தேடு, அது உனக்கு மெய்யாலும் ஆவிக்குரிய ஐசுவரியத்தையும், மகிமையையும் மெய்யான ஜீவனையும் கொடுக்கும். ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறாய். ஆனால் தேவாதி தேவனாகிய கர்த்தரைக்குறித்து வேதம் மரணபரியந்தமும் தம்மைதாமே தாழ்த்தினார்’ (பிலிப்பியர் 2 : 8) என்று சொல்லுகிறது. எஜமானனே தாழ்மையை அணிந்தவர் என்றால், அவருடைய சீடனாகிய உனக்குப் பெருமை எப்படியிருக்க முடியும்?

மேலும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இல்லாத பயங்கரமான சமுதாயத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நீ மெய்யாலும் கர்த்தரைபயப் பக்தியுடன், அவருடைய வார்த்தையின் அளவுகளில் உன்னால் நடக்கமுடியாததை உணர்ந்து கர்த்தருக்கு பயப்படுகிற உண்மையான பயத்தைக் கொண்டிருப்பாயானால் அது உனக்கு மேன்மையையும், கர்த்தரால் வரும் புகழ்சியையும் கொண்டுவரும். தேவனைக்குறித்த பயம் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறதா?