ஆகஸ்ட் 27 குறைவில் நிறைவு பிலிப்பியய் 4 : 10 — 20
‘என் தேவான் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலி 4 : 19)
‘குறைவு என்பது மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் கடந்துப் போகிற பாதைகளில் ஒன்று. பலவிதமான குறைவுகள் உண்டு. அது பலக்குறைவாக இருக்கலாம், பணக்குறைவாக இருக்கலாம், ஞானக்குறைவாக இருக்கலாம். ஆத்துமாக்களின் குறைவாக இருக்கலாம். இன்னும் எத்தனையோ விதமான குறைகள் உண்டு. ஆனால் இந்தக் குறைவுகளை மாத்திரம் நாம் நோக்குவோமானால் சோர்ந்துப்போக வாய்புண்டு.
ஆண்டவராகிய இயேசு ‘குறைவை நீக்குவார்’ என்று பரிசுத்த பவுல் பிலிப்பிய சபை மக்களுக்கு எழுதுகிறார். குறைவை நீக்குகிறது மாத்திரமல்ல நிறைவையும் கட்டளையிடுகிறார். ‘அன்பானவர்களே! உங்கள் குறைவை இயேசுவினிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். குறைவுகளையே நோக்கிப் பார்த்து சோர்ந்துப் போகாதிருங்கள். இந்த குறைவை எவ்விதம் நீக்குவார்? ‘தம்முடைய ஐசுவரியத்தின்படி நீக்குவார்.’ தேவனின் ஐசுவரியத்தை யார் அளவிட்டுச்சொல்லமுடியும்! இந்த உலகத்தின் வெள்ளியும் பொன்னும் தேவனுடையது. இந்த தேவன் வானத்தின் பலகணிகளைத் திரந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் ஆசீர்வாதத்தைப் பொழிகிற தேவன்.
ஒரு சில குறைகளை மாத்திரம் நீகுகிறவரல்ல, ‘குறைவையெல்லாம்.’ அதாவது எல்லாக் குறைவுகளையும் நீக்குகிறார். இந்த தேவன் தாம் சொல்லியபடி செய்கிறவர் என்று விசுவாசிப்போமாக. கானா ஊர் கலியானத்தில் ஏற்ப்பட்ட குறைவை அவர்கள் அப்படியே என்ன செய்வது என்று விட்டுவிட வில்லை. குறைவை நீக்குகிற இயேசுவினிடத்தில் எடுத்துச்சென்றார்கள். ஆண்டவராகிய இயேசு குறைவை சிறப்பானதாக நிறைவேற்றுவார். பிந்திய திராட்சை ரசமோ ருசி நிறைந்ததாயிருந்தது. அன்பானவர்களே! உங்கள் குறைவையெல்லாம் இயேசுவினிடத்தில் எடுத்துச்செல்லுங்கள். அவர் நிறைவாக்குவார். மெய்யான நிறைவை இயேசுமாத்திரமே கொடுக்கமுடியும்.