அக்டோபர் 7                                                           கழுதை                                                               மாற்கு 11 : 1 – 10

உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருகாலும் ஏறியிராத ஒரு கழுதைக் குட்டி கட்டியிருக்க காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். ஏன் இப்படி செய்கிறீகள் என்று  ஒருவன் உங்களிடத்தில் கேட்டால், இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்’ ( மாற்கு 11 : 2, 3 )

ஆண்டவருக்கு வேண்டியது கழுதைக்குட்டிதன், குதிரையல்ல. கழுதை ஒரு அற்ப பிராணி. துணிகளை சுமந்து செல்வதுதான் அது வேண்டும். அதை யாராகிலும் யுத்தத்திற்கு அழைத்துச் செல்வார்களா? அது பார்பதற்கு அழகாக இருக்காது. ஆனால் குதிரை அப்படியல்ல, அது கெம்பீர தோற்றமுள்ளது. வேகமாய் ஓடும், யுத்தத்திற்கு பிரயோஜனப்படும். அதில் ஏறிசெல்லுகிற மனிதனின் மதிப்பு அதிகம். பெருமையோடு அதின்மேல் உட்கார்ந்து செல்லுகிறவனாய் அவன் பறந்து செல்வான்.

அருமையான சகோதரனே! சகோதரியே! நீ குதிரையா? அல்லது கழுதையா? தேவனுக்கு வேண்டியது குதிரையல்ல, கழுதைதான். ஒரு வேளை நீ மற்றவர்களால் அற்பமாய் எண்ணப்படுகிற நாராக இருக்கலாம். மற்றவர்கள் உன்னைப் பார்க்கும் பொழுது உயர்வாக எண்ணக்கூடிய காரியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சோர்ந்து போகாதே. இயேசுவுக்கு அப்படிப்பட்ட நபர்தான் தேவை. ஆனால் ஒரு காரியம். அது அவிழ்க்கப்பட்ட கழுதையாக இருக்கவேண்டும். கட்டப்பட்ட கழுதையால்ல நீ இன்னும் பாவக்கட்டினால் கட்டப்பட்டிருந்தால் , இயேசுவுக்குப் பிரயோஜனமற்றவன். நீ விடுவிக்கப்பட்ட கழுதையா? பாவத்திலிருந்து விடுதலை உண்டா? அப்படியானால் நீ இயேசுவுக்கு வேண்டும். ஆண்டவராகிய இயேசு அந்த கழுதையின் மேல் பிரயாணம் செய்தபொழுது அந்த கழுதைக்கு கிடைத்த மேன்மையைப் பாருங்கள். எல்லோரும் அது நடக்கும் பாதையில் துணிகளையும் மரக்கிளைகளையும் விரித்தார்கள். இயேசுவைச் சுமந்த கழுதைக்குதான் இந்த மரியாதை இந்த கனம். உனக்கு இந்த கனம் வேண்டாமா? கழுதை தாழ்மையையும் குறிக்கிறது. இவ்விதமான தாழ்மையான பாத்திரம் இயேசுவுக்கு வேண்டும்.