ஏசாயா 31 : 1 –9
1. சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!
2. அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார்.
3. எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.
4. கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
5. பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
6. இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
7. உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள்.
8. அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.
9. அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
தாய்ப் பறவை தன்னுடைய குஞ்சுகளைப் பாதுகாப்பதைப் பார்க்கும்போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது! அவைகளுக்காக கூடுகளைக் கட்டுவதற்கு, எத்தனையோ இடங்களுக்குச்சென்று பலவிதமான பொருட்க்களை சேகரிக்கிறது. அந்தக் கூட்டில் தன்னுடைய குஞ்சுகளுக்கு மெத்தைய்ப்போல் மிருதுவான படுக்கையை ஆயத்தப்படுத்துகிறது. அவைகளுக்கு ஆகாரத்தை வேளாவேளைக்கு கொண்டுவந்து கொடுப்பதிலும் தாய்பறவை தவறுவதில்லை. மேலும் ஆபத்து வந்துவிட்டால், பறந்துவந்து அங்கு குஞ்சுகளின் மேல் தன் இறக்கையை விரித்து அவைகளைப் பாதுகாக்கின்றன.
இவ்விதமன தேவன் தம்முடைய மக்களுக்கு ஆதரவாயிருப்பார் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. உனக்குத் தேவையானவற்றை தேவன் அனுதினமும் சரியான நேரத்தில் கொடுக்காமல் விடார். குஞ்சுகள் பசித்த நேரத்தில் தன் தாய் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிற வண்ணம், நீ தேவனுடைய வேளைக்காக காத்துக்கொண்டிருந்தால், பறவை எவ்வியோதம் சரியான நேரத்தில் தன் ஆகாரத்தைக் கொண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கும் வண்ணமாக தேவன் உனக்குச் செய்வார்.
ஆபத்து கிட்ய்டிசேரும்போது தாய்பறவை தன் சிறகை விரித்து தன் கு ஞ்சுகளை பாதுகாப்பது போல, உன்னைத் தகது செட்டைகளின் நிழலிலே காப்பார். அருமையானவர்களே! நாம் தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குத்தத்தங்களையும் ஒரு குழந்த நம்புவது போல நம்பி சார்ந்துக்கொள்ள வேண்டும். அப்போது தேவன் நமக்குச் செய்யும் அநேக உதவிகளைக் காணமுடியும். மனிதன் நமக்கு நிச்சயமாக ஆதரவாயிருப்பாஅர். அவருடைய அதரவு என்ற படுக்கையில் நீ நிம்மதியாக உறங்கலாம். அப்பொழுது தாவீதைப்போல நாமும் சொல்லக்கூடும். ‘என் ஆபத்துநாளில் எங்க்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்த்ரோ எனக்கு ஆதரவாயிருந்தார்,’ சங்கீதம் (18 : 18)
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.