செப்டம்பர்  21                                                      என் ஆடுகள்                                                      யோவான் 10 : 24 – 32

‘என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது;நான் அவைகளை அறிந்திருக்கிறேன்; அவைகள் எனக்கு பின் செல்லுகிறது’ (யோவான்10 : 27)

ஆண்டவர் இயேசு எவர்களை என் ஆடுகள் என்று அழைக்கிறார்? ஆலயத்திற்கு போகிற எல்லோரும் அவருடைய ஆடுகளாய் இருக்கமுடியுமா? பரம்பரை பரம்பரையாக தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறவர்கள் அவருடைய ஆடுகளா? ஞானஸ்நானம், திடப்படுத்தல் பெற்ற அனைவரும் அவருடைய ஆடுகளா? போதகர் அனைவரும் அவருடைய ஆடுகளா? இல்லை, இல்லவே இல்லை.

அப்படியானால் அவருடைய ஆடுகள் எவர்கள்? முதலாவது தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவார்கள். செவிக்கொடுக்கிறவர்கள் என்றால் வெறுமையாய் கேட்க்கிறவர்கள் அல்ல. தேவனுடைய வார்த்தயை கேட்டு அதன்படு நடக்கிறவர்கள். தெசலோனிக்கேயரைப் போல அதை ஏற்று கீழ்படிந்து அதின் பலனை அனுபவிக்கிரவர்கள். (1 தெசலோனிக்கேயர் 2 : 13) நீ தேவனுடைய ஆடானால் இவ்விதமாய் ஜீவிப்பாய். வேதத்தில் தினமும் அவருடைய சத்தியத்தை கேட்பாய்.

இரண்டாவது ஆண்டவராகிய இயேசு உன்னை அறிந்திருப்பார். எவ்விதம் அறிந்திருப்பார்? இவன் என்னுடைய பிள்ளை, இவள் என்னுடைய குமாரத்தி, இவர்களுக்காக என் ஜீவனைக்கொடுத்தேன். என்னுடைய இரத்தத்தின் பேரில் விசுவாசம் வைத்து தங்கள் பாவங்கள் நீங்க சுத்திகரிக்கப்பட்டவர்கள். என் பேரில் உண்மையான விசுவாசம் உள்ளவர்கள். அவ்விதமாக ஆண்டவர் உன்னைப் பற்றி சொல்லக்கூடுமா?

மூன்றாவதாக, இந்த ஆடுகள் இயேசுவின் பின் செல்லுபவைகள். உலகத்தின் பின் அல்ல, உலக ஆசையின் பின் அல்ல, புகழின் பின் அல்ல, இயேசுவின் பின் செல்லுபவர்கள். இயேசுவைப்போல தன்னைதான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றி செல்லுபவர்கள். அவருடைய அடிசுவடுகளில் நடப்பவர்கள் (1 பேதுரு 2 : 21) மகிமை இராஜ்ஜியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறவர்கள். நீ மெய்யாலும் இயேசுவின் ஆடா?