அக்டோபர் 11                                            ஊக்கமான ஜெபம்                                                மத் 6 : 1 – 8

          ’நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைபோல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கெட்க்கப்படுமென்று நினைக்கிறார்கள்.’ (மத் 6 : )

            ஜெபத்தை ஒரு வெறும் பழக்கமாக, சடங்காச்சாரமாக செய்வது பிரயோஜனமற்றது. அது நீ எவ்வளவு நேரம் செய்தாலும் பலனளிக்கக்கூடியதல்ல. இன்றைக்கு அநேகருடைய ஜெபம் வழக்கமான ஜெபமாகவே இருக்கிறது. அவர்கள் உன்மையான ஜெப வாழ்க்கையை கொண்டிருப்பதில்லை. ஜெபம் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம், முக்கியம் என்பதை அறியாதவர்களாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரனே! சகோதரியே! உன் ஜெப வாழ்க்கை எப்படி இருக்கிறது? யோசித்துபார். உன் ஜெப வாழ்க்கையை செப்பனிட வா.

            ’எலியா என்பவன் நம்மைபோலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும் மழைபெயாதபடிக்கு கருத்தாய் ஜெபம் பண்ணினான்’  (யாக் 5 : 17) அங்கிலத்தில் பார்க்கும்பொழுது ஊக்கமாய், அதிக கவனத்தோடு ஒரு இலக்கு வைத்து ஜெபித்தான் என்று பார்க்கிறோம். வழக்கமான ஜெபத்தில் ஜீவன் இருக்காது. ஆனால் ஊக்கமான ஜெபத்தில் மிகுந்த பலன் உண்டு.

            செவ்விந்தியர்கள் மத்தியில், தேவனுக்கென்று உழைத்து வல்லமையான எழுப்புதலைக்கண்ட டேவிட் பிரெய்னாடு என்ற தெவ மனிதன், குளிர்ந்த வேளைகளிலும் ஜெபிக்கும்பொழுது வேர்வையினால் அவருடைய சரீரம் அப்படியே நனைந்துவிடுமாம். அது ஊக்கமான ஜெபம். ஆண்டவராகிய இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெபித்த பொழுது வேர்வை, இரத்தத்தின் பெருந்துளிகளாய் காணப்பட்டது என்று பார்க்கிறோம். கருத்தில்லாமல், ஊக்கமில்லாமல் அநேக மணி நேரங்கள்ஜெபிப்பதைக்காட்டிலும் உண்மையான ஊக்கமுள்ள ஒரு சில மணி நேர ஜெபம் மேலானது. நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் மிகவும் பலனுள்ளதாய் இருக்கும். உன்னுடைய பாரம் எப்படிப் பட்டதாயிருந்தாலும் ஊக்கமாக ஜெபி. தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்.