செப்டம்பர்  19                                               ஆறுதலின் தேவன்                                               யோவான் 6 : 6 – 18

‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்’ (யோவான் 14 : 18)

இதை அங்கிலத்தில் பாக்கும்போது நான் உங்களை ஆறுதலற்றவர்களாக விடேன் என்று பொருள்படும். சீஷர்கள் கலங்கிப்போன நேரத்தில், எதிர்காலத்தக் குறித்து நம்பிக்கை இழந்த நிலையில், அவர்களுக்கு இயேசு சொன்னார். ‘நான் இந்த உலகத்தில் உதவியற்றவர்களக விட்டுவிடமாட்டேன்’.

‘நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பார்..’ (யோவான் 14 : 16, 17 ) என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். இது எவ்வளவு பெரிய நம்பிக்கை. ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த மிக உன்னதமான சிலாக்கியம் இருக்கிறது. ஒவ்வொரு தேவ பிள்ளையும் தன்னை வழிநடத்துபவரான திரியேக தேவனில் ஒரு நபரான பரிசுத்த ஆவியானவர் தன்னில் வாசம்பண்ணுகிறதை உண்ருவான். பரிசுத்த ஆவியானவரோடு ஐக்கியம் கொண்ட வாழ்வைக் கொண்டிருப்பான். (2 கொரிந் 13 : 14 )

பரிசுத்த ஆவியானவர் அவனில் வாசம்பண்ணி, அவனை ஆண்டு வழிநடத்துகிறார். இது அவனுடைய வாழ்க்கையில் ஒரு புதுமையான ஒன்றாய் இருக்கிறது. பழைய மனிதனுக்குரிய பாவத்தன்மைகளை வெறுத்து புதிய மனிதனை தரித்துக் கொண்டவனாய் அவன் காணப்படுகிறான். ஒரு உண்மையான விசுவாசிக்கும், போலி விசுவாசிக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு காரியத்தில் நாம் அதிகமாக காணமுடியும். உண்மையான விசுவாசியில் பாடு, துக்கங்கள் ஆகிய பாதைகளில் கடந்துபோனாலும் அவனைத்தேற்றுகிற, ஆறுதலளிக்கிற பரிசுத்த ஆவியானவர் அவனில் இருப்பதால் அதை தைரியத்தோடே, நம்பிக்கையோடே கடந்து போவான். ஆனால் போலி விசுவாசி பரிசுத்த ஆவியானவர் அவனில் இல்லாததால் அவைகளில் நசிந்து போவான், நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவான். விசுவாசமற்றவனாய் செயல்படுவான். நீ எப்படியிருக்கிறாய் என்பதை ஆராய்ந்துப் பார்.