ஜூலை  29                         ஆசீவதிக்கப்பட்டிருப்பாய்                   உபாகமம் 28 : 1 -10

 

‘நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்,

நீ போகையிலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய்’  

(உபா 28 : 6)

மோசே, தேவனுடைய கட்டளைகளை இந்த மக்களுக்கு நினைவுபடுத்தி இந்த பிரமானங்களுக்குக் கீழ்படிவதன் அசீர்வாதாத்தைச் சொன்னார். இந்த புதிய ஏற்பாட்டின் காலத்திலும் நியாயபிரமானங்களின் மூலம் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களும் ஆசீவாதங்களும் நீக்கப்படவில்லை. நியாய பிரமானத்தை நிறைவேற்றின இயேசுகிறிஸ்துவின் மூலம் அந்த ஆசீர்வாதங்கள் இன்றைக்கு ஒவ்வொரு விசுவாசிக்கும் உண்டு.

நீ வரும்போது ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். காரியங்களை நிறைவேற்றுபடியாக நீ வெளியே சென்று வீடு திரும்பும்போது ஆசீவாதமற்றவனாய், ஆசீர்வாதமற்றவளாக அல்ல. தேவனுடைய நிறைவான அசிர்வாதங்களோடே நீ திரும்பி வருவாய். இந்த அசீர்வாதங்கள் பல வகையாக உனக்கு தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள் பொருள்களினால் நிறைந்த அசீர்வதமாக இருக்கலம். வீட்டை விட்டு புறப்படும்போது வெறுங்கையனாய் போவாய். ஆனால் வரும்போது கைகள் நிறைந்தவனாய் வருகிறாய். யாக்கோபு போல ‘இந்த யோர்தானை கோலும் கையுமாக கடந்து போனேன். ஆனால் இப்போது இரண்டு பரிவாரங்களுடன் திரும்பி வருகிறேன்.’ என்று சொல்லும்படியாக தேவன் உன்னை அசீர்வதிப்பர். நீ என்ன செய்தி கிடைக்குமோ என்று அஞ்சி வெளியே சென்றாய் ஆனால் இப்போதோ நற்செய்தியோடு திரும்பிவருகிறாய்.

நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். நீ இந்த பொல்லாத உலகில் போகும்போது உன்னோடே இருப்பார். நீ சந்திக்கும் பிரச்சனைகளை மேற்கொள்ள அவர் உதவி செய்வார். நீ பணி செய்ய, வேலை செய்யும் ஸ்தலத்துக்குப் போகும்போது பயமும் திகிலும், உள்ளவனாய் போகும் நாட்கள் காணப்பட்டாலும் அவைகளை அமைதிப்படுத்துகிற தேவனாய் அவர் செயல்படுவதை நீ பார்க்க முடியும். ‘ இதோ சகல நாட்களிலும் நான் உன்னுடனே இருக்கிறென்’ என்று சொன்ன இயேசு உன்னோடிருந்து உன்னை ஆசீர்வதிப்பார். இதை நீ மெய்யாலும் விசுவாசிக்கிறாயா? இவ்விதமன விசுவாச வாழ்க்கை உன்னிடத்தில் உண்டா?