கிருபை சத்திய தின தியானம்

ப்ரல் 30    நல்ல போராட்டம்    1 தீமொத்தேயு 6 : 1 — 12

விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போரடு, நித்திய

ஜீவனை பற்றிக்கொள்.’ (தீமோத்தேயு 6 : 12)

 ஆவிக்குரிய வாழ்க்கை சுலபமானது என்று அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் வேதம் அவ்விதம் போதிக்கவில்லை. பவுலும் தீமோத்தேயுவினிடத்தில் இது ஒரு போராட்டம் என்று சொல்லுகிறார். இது சாதாரண பொராட்டம் அல்ல. ‘ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிர பஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளில் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.’ (எபேசியர் 6 : 12) ஒரு விசுவாசி எவை எவைகளோடு போராட வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிற பட்டியலை பாருங்கள். ஒரு விசுவாசிக்கு எதிராய் எத்தனை சோதனைகள், எழும்பு நிற்கின்றன என்றும் பாருங்கள்! அதுவும் சாதாரண சோதனைகளா? இல்லை! அவைகளை நமது சொந்த பெலத்தால் மேற்கொல்ல முடியாது. ஆகவேதான் நாம் தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்ளவெண்டும் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. ஒரு கிறிஸ்தவனின் யுத்தம் அணுயுதத்தைக் காட்டுலும் பயங்கரமானது. அந்தகார லோகாதிபதிகளோடு போராடுவது என்றால் சாதாரண காரியமா?

 பவுல் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்திருப்பார் பாருங்கள். ஆனால் சந்தித்த போரட்டங்கள் அனைதும் சொல்லப்படவில்லை. ஆனால் அவரே நல்லப் போராட்டத்தைப் போராடினேன்’ (2தீமோ 4 : 7) என்று சொல்லியிருக்கிறார். அவர் வெறுமையாக தீமோத்தேயுவைப் பார்த்து நல்ல போராட்டம் போராடு என்று மாத்திரம் சொல்லவில்லை, அவரே நல்ல போராட்டம் போராடி முன் மாதிரியை வைத்தார்.

 அன்பானவர்களே! உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் எப்படி இருக்கிறீர்கள்?  இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரு மனிதனும் இந்தப் போற்றாட்டத்தைச் சந்தித்தே தீருவான். நீ இந்தப் போராட்டத்தில் பின்னடையாதே ஆண்ட்ஸ்வராகிய இயேசுவும் இந்தப் பாதையில் கடந்துப் போனார் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவரான அவரையே நோக்கிப்பார்த்துப் போராடு.