நித்திரை இன்பமாயிருக்கும்

கிருபை சத்திய தின தியானம்

 

ஜூலை 27      நித்திரை இன்பமாயிருக்கும்      நீதி 3 :20-30

 

‘நீ படுக்கும் போது பயப்படாதிருப்பாய்; படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரைஇன்பமாயிருக்கும்'(நீதி 3:24 )

 

   அருமையான இரண்டு காரியங்களை தேவன் தம்முடைய மக்களுக்கு வாக்களிக்கிறார். இன்றைக்கு எத்தனையோ உலக மக்கள் இவைகள் இல்லாதிருக்கிறார்கள். இரவு நெருங்க நெருங்க ஏன் இரவு வருகிறது என்று அங்கலாய்க்கிறவர்கள்,  முதலாவது தேவன் இங்கு, ‘நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்’ என்று சொல்லுகிறார். தேவன், பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் தைரியமுள்ள ஆவியை தம்முடைய மக்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். நீ படுக்கும்போது தேவனுடைய பாதுகாப்பை சார்ந்து படுக்கிறாய். ஆனால் உலக மனிதனோ எந்த பாதுகாப்பும் அற்ற நிலையிலேயே தன்னுடைய படுக்கைக்குப்போகிறான். ஒருவேளை வியாதியின் படுக்கையாக இருந்தாலும் அந்தப் படுக்கையை தேவன் மாற்றிப்போடுகிறேன் என்று சொல்லுகிறார். அவருடைய வேளைவருமானால் தேவன் நம் படுக்கையலும் அவருடைய அருமையான பிரசன்னத்தைக் கொடுத்து அவர் பிரசன்னத்திற்கு அழைக்கிறார்.

   இரண்டாவதாக நம் நித்திரை இன்பமாக இருக்கும் என்று வாக்களிக்கிறார். அநேகர் தங்களுடைய திரளான பணம், பொருள், வியாபாரம் ஆகிய இவைகளை எண்ணி கவலைகளினால் நித்திரை வராமல் இருக்கிறார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், முக்கிய மனிதர்கள் என்று இந்த உலகத்தில் கருதப்படுகிறவர்கள், நித்திரைக்காக தூக்க மருந்துகளை உபயோகப்படுத்துகிறார்கள். இயற்கை நித்திரை சரீர களைப்பை நீக்கி புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும். செயற்கை நித்திரை சரீரத்தை பலவீனபடுத்துவதோடு நரம்புகளை தளரச் செய்யும்.

   இதை வாசிக்கும் அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொள். இரவு  படுக்கைக்குச் செல்லுமுன், உங்கள் பாரங்களையெல்லாம் என்மேல் வைத்துவிடுங்கள் என்று சொன்ன உன் ஆண்டவர் மேல் வைத்துவிடு. நீங்கள் பயப்படாமல் படுக்கைக்குச் செல்லுகிறீர்களா? ஆண்டவரிடம் உங்களை ஒப்புகொடுங்கள், உங்கள் நித்திரை இன்பமாயிருக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.