தீமையை வெறுத்தல்(2017)

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 3                                  தீமையை வெறுத்தல்                          சங் 97:1-12                

கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;” (சங் 97:10)

          கர்த்தரில் அன்புகூருகிறவர்கள் எவ்விதம் தீமையை வெறுக்காமல் இருக்கமுடியும்? தேவனையும் நாம் நேசித்து, தீமையும் நாம் விரும்ப முடியுமா? அது சரியானது அல்ல. தேவனை நாம் நேசிக்கும்பொழுது கர்த்தர் நமக்காக பெரிய காரியங்களை வைத்திருக்கிறார். கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் என்று யாக்கோபு 1:12 –ல் சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தரில் நாம் அன்புகூறும்பொழுது மேலான வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டு. தீமையை நாம் நேசிக்கும்போழுது தேவனுடைய உன்னதமான சிலாக்கியங்களை நாம் இழந்து விடுவோம்.

           சங்கீதம் 37:27 –ல் “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்”. உன்னுடைய வாழ்க்கையில் நீ விரும்பிப்  பற்றிக்கொண்டிருக்கும் பாவங்கள் உண்டா? அவைகளை விட்டு விலகு. அப்பொழுது கர்த்தர் உனக்கு மெய்யான சமாதானத்தின் ஆசீர்வாதங்களைக் கொடுப்பார். சங்கீதம் 119:104 -ல் “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். பொய்யான வழிகள் எப்பொழுதும் நமக்கு உதவாது.

       மேலும் தேவன் “தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்;” (நீதி 8:13) என்று சொல்லுகிறார். ஆகவே கர்த்தரில் அன்புகூருகிற நாம், நிச்சயமாக பாவத்தை வெறுத்து நீதியை பற்றிக்கொள்ளுவோம். அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதை நாம் அறிந்து வாழமுடியும். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28) என்று பவுல் சொல்லுகிறார். ஆகவே, தீமையை வெறுத்து கர்த்தரில் அன்புகூருவதே தேவனுக்குப் பிரியமான வழி என்பதை மறந்துவிடாதே.

You may also like...

Leave a Reply