வரங்கள்

கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 18                         வரங்கள்               1 கொரிந் 12:1-11

ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய

பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (1 கொரிந் 12:7)

  தமிழ் வேதாகமத்தில் இந்த வசனத்தில் உள்ள ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மூலபாஷையிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது சபையின்  பிரயோஜனத்திற்கென்று கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே சரியான மொழிபெயர்ப்பு. இதே அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களோடு அவ்விதம் வாசித்துப் பார்ப்பீர்களானால், அந்த வசனம் மற்ற வசனங்களோடு சரியாக பொருந்துவதைப்  பார்க்கமுடியும்.

   இன்றைக்கு ஆவிக்குரிய வரங்களைக் குறித்து  சரியான விளங்குதல் இல்லாததால் எங்குப்பார்த்தாலும் இதைக் குறித்த குழப்பம் காணப்படுகிறது. அதைக் குறித்து பெருமை பாராட்டிக்கொண்டும், விளம்பரப்படுத்திக்கொண்டும் இன்று அநேக ஊழியர்கள் என்று சொல்லுகிறவர்கள் மக்களை தவறாக வழிநடத்திக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவன் இதைக்குறித்து தெளிவுள்ளவனாய்க் காணப்படுவது மிக அவசியமானது. ஆகவேதான் பவுல் இந்த அதிகாரத்தை ஆரம்பிக்கும்போதே, அன்றியும் சகோதரரே ஆவிக்குரிய வரங்களைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை (1கொரி 12:1) என்றுஆரம்பிக்கிறார்.

     தேவ ஆவியானவர், சபையின் பிரயோஜனத்திற்காக, சபை மக்களின் நன்மைக்காக, சபையின் வளர்ச்சிக்காக ‘தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துக் கொடுக்கிறார்’ (1கொரி 12:11). நமது விருப்பத்தின்படியல்ல. ஆவியானவரின் வரங்கள் அநேகம். வேதம் அவ்விதம் 1 கொரி 12ல் மாத்திரமல்லாது மற்ற பகுதிகளிலும் சொல்லியிருக்கிறதை வாசிக்கிறோம். (உதாரணம் ரோமர் 12:6-8; எபேசி  4:11-13). ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன், வரத்தை அல்லது வரங்களைக் கொடுத்திருக்கிறார். நீ உன்னுடைய வாழ்க்கையில் அதை அறிந்து தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தும்படியாக எதிர்பார்க்கப்படுகிறாய்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.