Share the message
‘அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்’
(ஏசாயா 42 : 3 )

ஏசாயா 42 : 1–10

1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

5. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:

6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

8. நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

9. பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10. சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

இந்தவசனம் நமக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது பாருங்கள். இந்த உலகில் தளர்ந்துபோன பலவீனமான மக்கள் வரவேற்கப்படுவதில்லை. ஆனால் தேவன் செயல்படும் விதம் எவ்வளவு வித்தியாசமானதாக இருக்கிறது. நான் நாணல் என்று சொல்லுவதற்கும் தகுதியுள்ளவனல்ல. ஏனென்றால் அந்த நாணல் வளர்ந்து நின்று பார்பதற்கு செழிப்பாய் காணப்படுகிறது. அது தோற்றத்தில் அழகாண தோற்றத்தை கொண்டிருக்கின்றது. ஆனால் நானோ நெரிந்த நாணலாக இருக்கிறேன். நிமிர்ந்து நிற்க்க திரானியற்றவனாய் இந்த உலகில் எல்லா போராட்டங்களின் மத்தியில் கடந்துச் செல்லமுடியாதவனய் இருக்கிறேன். மிகச்சிறிய சோதனையிலும் முரிந்துவிடுகிறேன். தோற்றுவிடுகிறேன், தடுமாறுகிறேன். நம்பிக்கையில்லாத ஒரு மனிதனாகத் தீமைக்கு எதிர்த்து நிற்க்க திரானியற்றவனாக வாழுகிறேன். ஆனாலும் தேவன் என்னை முறித்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். தேவன் அவ்விதம் செய்யமாட்டார் என்றால் இந்த உலகில் வேறு எந்த மனிதனும் அவ்விதம் என்னைச் செய்யமுடியாது என்பதை அறிவேன்.

நான் பிரகாச்சமுள்ள திரியாக அல்ல, மங்கியெரிகிற திரியாக இருக்கிறேன். நான் சீக்கிரத்தில் அணைந்துவிடுவேனோ என்று பயப்படும் அளவுக்கு மங்கியெரிந்துக் கொண்டிருக்கிறேன். என்னில் ஒளி எவ்வளவு குறைவாய் இருக்கிறது. வெறும் புகையை வெளிப்படுத்துகிறவனாய் காணப்படுகிறேன். ஆனாலும் என் தேவன் என்னை அணைத்து விடமாட்டேன் என்று சொல்லுகிறார். அப்படி அவர் சொல்லியிருக்க நான் ஏன் பயப்படவேண்டும்.

அன்பானவரே! உன் ஆவிக்குறிய பெலம் எவ்வளவு குறைவானதாக காணப்பட்டாலும் நீ அநேக சமயங்களில் உன் ஆவிக்குறிய நிலையைக் குறித்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாலும் கலங்காதே. தேவனையே நோக்கிப்பார். சாத்தான் உன்னை அதைரியப்படச்செய்யலாம். ஆனாலும் சோர்ந்துப் போகாதே. உன்னை அழைத்த தேவன் வல்லவராயிருக்கிறார். அவர் உன்னை முற்றும் முடிய இரட்சிப்பார்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.