ஜூலை 18      வேதத்திலுள்ள அதிசயங்கள்              சங்கீதம்      119 : 17 — 32

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும்’ (சங்கீதம் 119 : 18)
வேதத்தின் சத்தியங்களை, எந்த ஒரு மனிதன் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும்? அது கடலைக் காட்டிலும் மிகவும் விஸ்தாரமானது. ஆனால் தேவனுடைய வார்த்தை ஒன்றே ஒரு மனிதனுக்கு வெளிச்சம் தரும். எத்தனையோ பேர் தேவனுடைய சத்திய வேதபுத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வீடுகளில் ஆண்டு ஆண்டாய் அது இருக்கிறது. சிறு வயது முதல் அதை வாசிக்கிறார்கள். பிரசங்கத்தை கேட்கிறார்கள். ஆனாலும் வேதத்திலுள்ள மேலான தேவனுடைய சத்தியத்தை அறியவேண்டுமென்று வாஞ்சையற்ற வர்களாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அதினால் அவர்கள் வாழ்க்கையில் அடையும்படியான இழப்பு எவ்வளவு பெரியதென்று எண்ணுவதில்லை. அன்பான நன்பரே! நீ அவ்விதம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாயா? தேவனுடைய வார்த்தை உனக்கு மறைபொருளா யிருக்கிறதா? அப்படியானால் இந்த சங்கீதகாரனைபோல ஜெபி.
தேவனுடைய சத்தியத்தின் அறிவில் வளர்வது உனக்கு மனமகிழ்சியைக் கொடுக்கும் (சங்க் 119 : 92 ) மெய்யான மகிழ்ச்சியை தேவனுடைய வார்த்தியின்மூலம் நீ வெறுவது மாத்திரமல்ல, அது உன் வாழ்க்கையின் துக்கவேளைகளையும் வெற்றியோடே கடந்துச்செல்ல உதவும். மேலும் ‘உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்திரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி’ ( சங்க் 119 : 111 ) என்று சொல்லுவாய்.
நீ தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடு. தேவனுடைய வார்த்தையானது xUfhyj;jpYk; kD\Uila rpj;jj;jpdhNy cz;lhftpy;iy@ NjtDila ghpRj;j kD\h;fs; ghpRj;j MtpapdhNy Vtg;gl;Lg; Ngrpdhh;fs;. (2பேதுரு 1 : 21) தேவஆவியானவர் தம்முடைய வார்த்தைகளை உனக்கு விளக்கிக்காட்டும் பொழுதுதான் கர்த்தருடைய வார்த்தைய நீ விளங்கிக்கொள்ளமுடியும். தினமும் நீ வேதத்தை வாசிக்கும்பொழுது உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும் என்று ஜெபி. தேவன் அவ்விதம் செய்வார்.