ஜூலை 16       வசனத்தைப் போதித்தல்              (1 பேதுரு 4 : 1–14)

‘ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்’
(1 பேதுரு 4 : 11)

வேதத்தில் போதிப்பதைக் குறித்து அநேக இடங்களில் சொல்லப்பட்டிருக்கிரது. அதேவேளையில் எல்லோரும் போதிக்கிறேன் என்று சொல்லி தங்களுக்கு தெரிந்திருக்கிரவைகளையெல்லாம் சொல்லுவது வேத போதனையல்ல. அதற்கென்று ஒழுங்குமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகள் அதிகாரமுள்ளது. அதிகாரமுள்ள இந்த வார்த்தையயை அதற்கேற்ற வண்மையாகக் கையாளவேண்டியது ஒரு பிரசங்கியின் பெரிய உத்திரவாதம். அவர்களுடைய போதனையானது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றபடியாக இல்லையென்றால் அது மெய்யான போதனையல்ல.

தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பதைக்குறித்து பவுல் தீமோத்தேயுவுக்கு எவ்விதமான ஆலோசனை கொடுக்கிறார்?. இன்றைக்கு எப்படி தவறான உபதேசங்கள் அதிகமாய் மலிந்துவிட்ன? சரியாய் தனுடைய வசனத்தை பகுத்துபோதிக்காத பிரசங்கங்கள் அநேகம் செய்யப்படுகின்றன. அதைக்கேட்கிறவர்களும் இது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ற போதனையா என்று எண்ணுவதில்லை. அது கர்த்தருடைய வார்த்தைக்கு ஏற்றதோ, ஏற்றதில்லையோ என்பது முக்கியமல்ல, ஆட்கள் அதற்கு அதிகம் சேர்வார்களானால், அதிக ஜனங்கள் கூட்டத்திற்கு வருவார்களானால் அது சரி என்று எண்ணுகிற காலமாக இது இருக்கிறது. இந்த கர்த்தருடைய வார்த்தையைத் திரித்துபோதிக்கிற எந்த ஊழியகாரனும் வெட்கப்பட்டுபோவான்.
தேவனுடைய வார்த்தையைக் குறித்த பயபக்தி இன்று அற்றுப்போயிற்று. வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்தில் 18 , 19ம் வசனகளில் இந்த வேதபுத்தகத்தில் உள்ள தேவனுடைய வசத்தோடே எதையும் கூட்டவும் குறைக்கவும் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இவிதம் தேவனுடைய வார்த்தையை ஜாக்கிரதையாகக் கையாளுகிறோமா?