பிப்ரவரி 6                               பொறுமையின் பலன்                                   யோபு 42 : 1 – 17

‘கர்த்தர் யோபின் முன் நிலைமையைப் பார்க்கிலும் அவன் பின் நிலைமையை ஆசீவதித்தார்.’ (யோபு 42 : 12)

 

யோபுவின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஆவிக்குரிய பெரிய சத்தியங்களைப் போதிக்கிறத்யாயிருக்கிறது. அதேபோல் யோபுவின் மனைவி மூலமாயும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமும் உண்டு. துன்பங்கள் தொடர்ந்து வந்த போது யோபுவின் மனைவி ‘நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனை தூஷித்து ஜீவனை விடும்’ (யோபு2 : 9) இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாய் சென்றுகொண்டிருக்கும்போது பக்த்தியுடன் காணப்படுவார்கள். ஆனால் கஷ்ட்டம் வந்துவிட்டாலோ, அவர்கள் பக்தி காற்றில் பஞ்சு பறப்பதுபோல, வேகமாய் பறந்து விடுகிறது. நீ எத்தனை சமையங்களில் உன் பக்தியின்மையை வெகு சீக்கிரத்தில் வெளிப்படுத்திவுகிறாய்.

உன் வீட்டில், வேலை செய்யும் இடத்தில், கொஞ்சநேரத்தில் சட்டென அவ்விசுவாச வார்த்தைகளைக் கொட்டுகிறாய். அது மற்றவர்களுக்கு வெகு இடறலாயிருக்குமே என்று யோசித்தும் பார்ப்பதில்லை. உன்னுடைய பிள்ளைகள் உன் அவிசுவாச வார்த்தைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீ சிந்திப்பதில்லை. வார்த்தைகள் உதட்டை தாண்டுவதற்கு முன்பாக அது எவ்வளவு தூரம் சரி, என்பதை நீ சிந்திப்பதில்லை.

ஆனால் யோபு அவ்விதம் உடனடியாக வார்த்தைகளை அள்ளி வீசவில்லை. நிதானமாக பேசுகிறான். ஆண்டவரே, அவனை குறித்து சொல்லும்போது ‘எந்தாசனாகிய யோபு பேசினது போல் நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய் பேசவில்லை.’ மேலும் யோபுவின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளவேண்டிய அடுத்த காரியம், பொறுமை, பொறுமைக்கு என்று பலன் உண்டு. பொறுமை ஒருபோதும் ந் வீணல்ல. அவசரப்படுவது வீண். அவசரப்பட்டு, கோபப்பட்டு, செயல்படுவது வீணாய் முடியும். யோபுவின் பொறுமைக்கு தேவன் பலன் கொடாமல் போனாரா? இல்லை. அவனை தேவன் இரண்டுமடங்காக ஆசீர்வதித்தார். பொறுமையின் ஆசீர்வார்தம் எப்போதும் இரட்டிப்பாக இருக்குமேயொழிய அது ஒருபோதும் குறைவுபடாது.