அக்டோபர்  12                              பரிசுத்தாவியின் வல்லமை                                                  அப் 1 :1 – 4

பரிசுத்தா ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.  (அப் 1 : 8)

ஆண்டவராகிய இயேசு, அவருக்குப்பின் பரிசுத்த ஆவியானவர், தொடர்ந்து பூமியில் என்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக வேதத்தில் சொல்லியிருக்கிறார். முக்கியமாக அவர் உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படும் நாளில் சொன்ன வாக்குத்தத்தத்தை நாம் சிந்திக்கவேண்டும்.

முதலாவது, தேவ ஆவியானவர், ஒரு மனிதனில் வரும்போது நடக்கும் காரியமென்ன? அவனை ஆவியில் பெலப்படுத்துகிறார். அவனுடைய பாவத்தை உணர்த்தி மனந்திரும்புதலுக் குள்ளாக வழி நடத்தி அவனை தேவ நீதியில் பெலப்படுத்துகிறார். நீதியான வாழ்க்கை செய்ய, தேவனுக்கென்று தைரியமான சாட்சியாய் நிற்க  பெலப்படுத்துகிறார்.  ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் அவனுடைய சாட்சி மிக மிக முக்கியமானது. தெவ அவியானவர் நீ நடக்க வேண்டிய வழியை போதித்து உன்னை வழி நடத்துவார். பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் வாசம் பண்ணுகிறார் என்பதற்கு ஒரு முக்கிய பரிசோதனை என்னவென்றால் அந்த மனிதன் சாட்சியாய் வாழ்கிறானா எல்லையா என்பதுதான்.

ஒருவேளை நீங்கள் ஒரு கேள்வி கேட்க்கலாம். நான் அறிந்த அநேகர் பரிசுத்த ஆவியால் நிரம்பியிருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை சாட்சியாக இல்லையே? அருமையான சகோதரனே! சகோதரியே! அவ்விதம் சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறவர்கள், ஏமாந்துபோவார்கள். இது மிகவும் பரிதாபமானது. உன் வாழ்க்கை சாட்சியுள்ளதாக இருக்கிறதா? பரிசுத்த ஆவியானவர் உன்னில் வாசஞ்செய்வாரானாஃல் இந்த உலகில் நீ சாட்சியாய் வாழ்வதகான பெலன் உன்னில் கொடுக்கப்பட்டிருக்கும். நீ சாட்சியாய் வாழுவாய். இது தேவ வார்த்தை, ஒருகாலும் மாறாது.