தப்புவிக்க வல்லவர்

பிப்ரவரி 22                                தப்புவிக்க வல்லவர்                      2 கொரி 1 : 1 – 10

அப்படிப்பட்ட மரணத்தினிக்ன்று எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும்            தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.’          (2கொரிந் 1 : 20)

பவுல் இந்த அதிகாரத்தில் 8ம் வசனத்தில், தான் ஆசியாவில் சந்தித்த உபத்திரவத்தைப் பற்றிச் சொல்லுகிறார். ‘பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.’ மரணமே முடிவு என்ற நிலையான சோதனை. ஒருவேளை நம்முடைய வாழ்க்கையில் இவ்விதமான கடுமையான சோதனைகளை சந்திக்கலால். ஆனால் பவுலை விடுவித்த தேவன் நம்மையும் விடுவிக்க வல்லவராயிருக்கிறார்.

பவுல் இதன் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை முந்தின வசத்தில் சொல்லுகிறார். ‘நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகின்ற தேவன் மேல் நம்பிகையாயிருக்கத்தக்கதாக’ (2 கொரி 1 : 9) நம்முடைய வாழ்க்கையிலும் தேவனையே சார்ந்துக்கொள்ளும்படியாக இவ்விதமான சோதனைகள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனைகள் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் மனந்தளராதே. தேவனையே சார்ந்துக்கொள். ஆனால் பவுல் அவருடைய எதிர்காலத்தின் சோதனைவேளைகளிலே, கடந்தகால சோதனைகளில் விடுவித்த தேவன், தன்னுடைய ஒவ்வொரு சோதனை வேளைகளிலும், தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை நிருபிக்க முடிந்தது. அவ்விதமாகவே தேவன் அவருடைய உபத்திரவவேளையிலும், தன்னை விடுவித்த தேவன், உங்களையும் விருவிக்க வல்லவராயிருக்கிறார். என்றும் சொல்லக்கூடியவரானார்.

அதோடு பவுல் நின்று விடவில்லை. ‘இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.’ என்று சொல்லுகிறார். இன்றைக்கு மக்கள் எதிர்காலம் எப்படியாக இருக்குமோ என்று பயத்துடன்நோக்குகிறார். அநேகர் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கயற்றவர்களாயிருக்கிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவனின் நம்பிக்கை என்ன? இம்மட்டும் வழிநடத்தின தேவன் இனிமேலும் அவ்விதமாகவே வழி நடத்த வல்லவராயிருக்கிறார் என்பதே. நண்பரே! உன்னுடைய விசுவாசம் மூன்று காலத்திற்கும் உறுதியாய் இருக்கிறதா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.