சமாதான காரணர்

ஆகஸ்ட் 19                                                                      சமாதான காரணர்                                                                             மீகா 5 : 1 –15

‘இவரே சமாதான காரணர்’ மீகா 5 : 5

நாம் சமாதனமற்ற உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.எங்குப் பார்த்தாலும் சமாதான குறைச்சல் மலிந்துக்கிடக்கிறது. நாட்டுக்கு நாடு சமாதானமினமை, சமாதானமற்ற சூழ்நிலைகள் எங்கும் காணப்படுகியோறது. சமாதானமின்மை அங்கேக குடும்பங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமாதானமின்மை குடும்பங்களில் கணவன், மனைவி, விள்ளைகள் மத்தியிலுறவைப் பாதிக்கிறது. வெறுப்பு, கசப்பு போன்ற கனிகள் அங்கு காண்ப்படுகின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இருதயத்திலும் சமாதானமின்மை ஆளுகை செய்கிறது.

மேலும் சொல்லப்பட்ட இந்த வசனத்தை மீகா தீர்க்கத்தரிசி, வர்போகிற மேசியாவான ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார். ‘இவரே சமாதானக் காரணர்’ இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. இயேசுவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. அநேகருடைய வீட்டில் ‘இயேசு இந்த வீட்டின் தலைவர்’ என்ற வசனப்பலகை மாட்டாப்பட்டிருக்கும். ஆனால் அங்கு நடப்பதற்கும் இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அன்பானவர்களே! மெய்யாலும் இயேசு உங்கள் வீட்டின் தலைவராக இருக்கிறாரா? அவருடைய ஆளுகை உங்கள் வீடில் உண்டா? அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.

இயேசு ஒருவரே மெய்யான சமதானத்தைக் நமக்கு கொடுக்க வல்லவர். இயேசு சிலுவையில் அரையப்பட்ட பின்பு கலங்கிப்போன சீஷர்களைப் பார்த்துசொன்னதைப் பாருங்கள்: ‘சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்கு பயந்ததினல் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்ககளுக்குச் சமாதானம் என்றார்’ (யோவான் 20 : 19). இயேசு ஒருவரே நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறவர். சமாதானத்தை உங்களுக்கு வத்துப்போகிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான். 14 : 27)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.